தருமபுரம் ஆதீனம் வழங்கும் 2020ஆம் ஆண்டுக்கான 'அறிஞர் விருது' ஆண்டுதோறும் அறிஞர் ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் விருது, நடப்பு ஆண்டு எழுத்தாளரும், காவிரி குழுமத் தலைவருமான கோமல் அன்பரசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தருமபுரம் ஆதீனகர்தர் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அறிவித்தார். வரும் மே 7ஆம் தேதி தருமபுரத்தில் பிரமாண்டமாக நடைபெறும் குடமுழுக்கு உத்ஸவத்தின்போது 'அறிஞர் விருது' கோமல் அன்பரசனுக்கு வழங்கப்படும்.
தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் பெயர் பெற்ற ரா.பி.சேதுப்பிள்ளைக்கு தருமபுரம் ஆதீனம் 'சொல்லின் செல்வர்' விருது வழங்கியது. அவரில் தொடங்கி முக்கால் நூற்றாண்டாக அறிஞர் ஒருவருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தருமபுரம் ஆதீனத்தின் 'தமிழ் அறிஞர்' விருது மதிப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் தமிழ் உயராய்வுத்துறையின் சார்பில், கோமல் அன்பரசன் எழுதிய நூல்களின் ஆய்வரங்கம் 'அன்பெழுத்து' என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்று அருளாசி வழங்கிய தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மயிலாடுதுறை தனி மாவட்ட போராட்டத்துக்கு வித்திட்டவர் கோமல் அன்பரசன் என்று பாராட்டினார். மயிலாடுதுறை தனி மாவட்டமாக அமைந்தால் அப்பெருமை அன்பரசனையே சாரும் என்றார் ஆதீனம்.கோமல் அன்பரசனின் நூல்கள் (One Day Seminar on Komal Anbarasan Books)
தமிழின் தனித்துவமான இளம் எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான கோமல் அன்பரசன் அவர்கள் எழுதிய 21 நூல்களில் 8 நூல்களைப் பற்றிய ஒரு நாள் ஆய்வரங்கத்தினை பாரம்பரிய சிறப்புமிக்க மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் தமிழ் உயராய்வுத்துறை நடத்தியது
காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இந்த ஆய்வரங்கம் நடைபெற்றது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்