பெண்கள் சக்தியின் வடிவம்.தமிழக ஆளுநர் வாழ்த்து.
சர்வதேச மகளிர் தினமான இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "பெண் என்பவள் சக்தியின் உருவம் என்ற கோட்பாட்டை, நமது பண்பாடு நமக்கு கற்றுத் தந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
உலக மகளிர் தினம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தேசத்திற்கு தங்கள் வெற்றியின் மூலம் பெருமை சேர்த்தவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களின் பாதுகாப்பையும் அவர்களுக்கு அளிக்கும் மரியாதையையும் மீண்டும் உறுதிபடுத்த உறுதி ஏற்போம்,’ என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி உலக நாடுகள் பலவும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவர்களை மையப்படுத்தி பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ள நிலையில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையில் சர்வதேச மகளிர் தின உளமார்ந்த வாழ்த்துக்களை அனைத்து பெண்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன். நல்லதொரு சமுதாயத்தை, நாட்டை, உலகினை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும், அயராது உழைக்கும் பெண்களுக்கு மரியாதை அளிக்கும் நாளே மகளிர் தினம்.
சமூகத்தின் அனைத்து துறைகளிலும் தங்கள் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, தியாகம் ஆகியவற்றால் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திய தனித்துவமிக்க சாதனைப் பெண்களை வாழ்த்துவதே மகளிர் தினமாகும். சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில், பெண்களின் பாதுகாப்பையும், அவர்களுக்கு அளிக்கும் மரியாதையையும் மீண்டும் உறுதிபடுத்த உறுதி ஏற்போம். இதன் மூலமே, அவர்கள் தங்கள் இலக்கினை நம்பிக்கையுடனும், உத்வேகத்துடனும் தடையின்றி அடைய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்