ஜனதா ஊரடங்கில் இந்திய மக்கள்.பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதை நாடு முழுவதும் இன்று மக்கள் பின்பற்றி வருகின்றனர்.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொரானா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. தற்போது 290 க்கும் மேற்பட்ட வர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேசமயம் கொரானா தாக்கம் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரானா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இந்த சூழலில் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தலால் காலை சரியாக 7 மணிக்கு சுய ஊரடங்கை மக்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
உலக நாடுகளில் 4,5வதுவாரத்தில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏராளமானோரின் உயிர் பலி வாங்கியுள்ளது. இதை இந்தியா வில் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.சுய ஊரடங்கில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது. கால் டாக்சி, ஆட்டோ போன்றவை பொதுமக்களின் அவசர பயணத்திற்காக மட்டும் இயக்கப்படும்.அலட்சியம் ஆபத்தின் ஆரம்பம்; மக்கள் ஊரடங்கி விட்டால் போதுமா?
மெட்ரோ ரயில் சேவையும் இன்று ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் ரயில் மற்றும் விரைவு ரயில் சேவையும் இன்று இருக்காது. வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.
நட்சத்திர ஓட்டல்கள் திறந்தே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் பெரும்பாலும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இன்று காலை 7 மணி வரை மட்டுமே பால் விற்பனை நடைபெறும் என்று கூறப்பட்டு இருந்தது. எனவே பொதுமக்கள் அதிகாலையிலேயே எழுந்து பால் பாக்கெட்களை வாங்கி வைத்துக் கொண்டனர்.அசாம் மாநில கவுகாத்தியில் கடைகள் அனைத்து மூடப்பட்டுள்ளன. இன்று காலை முதலே பொதுமக்கள் யாரையும் வெளியில் காண முடியவில்லை. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள சாலைகள் எந்தவொரு வாகனமோ, மக்களோ இல்லாமல் வெறிச்சோடியது, சென்னை கடற்கரைச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை.முன்னெச் சரிக்கை நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்