உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பீதியிலுள்ள நிலையில், சலூன் கடை ஒன்றில் நீளமான கம்பில் முடிவெட்டும் இயந்திரத்தையும் சீப்பையும் பொருத்தி, தூரமாக நின்று முடி வெட்டும் இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் முடி திருத்துபவர் வாடிக்கையாளர் என இருவருமே முகக் கவசம் அணிந்திருக்கின்றனர். நகைப்பு, திகைப்பு, அதிர்ச்சி என பார்ப்பவருக்கு கலவையான மனநிலையை இந்த வீடியோ ஏற்படுத்தி வருகிறது. பாரம்பரியமாக முடிவெட்டும் சலூன் கடைகளை எல்லாம் உலகமயமாக்கல் விழுங்கி ஏப்பம் விட்டுப் பல ஆண்டுகளாகிறது . வாயில் நுழையாத விதவிதமான பெயர்களுடன் நவநாகரிக சலூன்கள் தெருவெங்கும் வந்துவிட்டது. நகரில் மட்டுமே இந்த நிலை அல்ல கிராமப்புறத்திலும் அப்படித்தான் பெயர்களை உச்சரிப்பதே சாதனைதான். லோரஞ், லோரியல், வாரன் டிரிகோமி, லா ரிய்னா, எசன்சுவல்ஸ் எனப் நீள்கிறது. பெயர்களின் அர்த்தம் புரிந்துவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் வைக்கப்பட்டதுபோல. ஒயெல்ஜி, சில்பிரீஸ், சலூன்புளோ, வர்வ், லைம் லைட் போன்றவற்றின் அர்த்தம், அவற்றைச் சூட்டியவர்களுக்காவது தெரியுமா என்பது
30 YT Bug Boyjpg
நெருப்புடா என்பதுபோல ‘ப்ரீஸ் டா’ என்று ஒரு சலூனுக்குப் பெயர். மதுப்பார்களைப் போல விதமாக ‘ஸியர் ஜீனியஸ்’, ‘பவுன்ஸ்’ போன்ற பெயர்களையும் காண முடிகிறது. கணேஷ் சிகை அலங்காரக் கடை ,முருகன் சிகை அலங்காரக் கடை’ போன்றவை எல்லாம் மலையேறிவிட்டன. ரஜினி, கமல், டிஸ்கோ, தல, தளபதி போன்ற பெயர்களுக்கும் மூடு விழா நடத்தி ஆண்டுகள் ஓடிவிட்டன.கதிர் அறுத்த கட்டுகள் பெற்று வருடம் முழுவதும் சவரக்கடை பார்த்த தாத்தா காலம் போய் சலூன் கடை பார்த்து முடிவெட்டிய நமக்கு இவர்கள் நடத்தும் தமிழகத்துக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத ‘டோனி’ பெயரில் பல சலூன்கள் உள்ளன. கேப்டன் தோனியோ என நினைத்துக் கேட்டால், அது அவரல்ல என்கிறார்கள். ‘அப்ப யாரப்பா அந்த டோனி’ என்று கேட்டால், அந்தக் கடையில் வேலை செய்பவர்களிடம் அதற்கும் பதில் இல்லை.
இவற்றையெல்லாம் மீறி அத்தி பூத்தாற்போல 1980களை நினைவூட்டும் வகையில் சில சலூன்களின் பெயர்கள் உள்ளன. கிராப் சலூன், ரிச் கட்ஸ், சக்தி சலூன் ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். ‘கிராப் கட்’ என்பதை 40 வயதைக் கடந்தவர்கள் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.
இன்று சலூன்களின் பெயர்ப் பலகையை ரஜினி, கமல் போன்றவர்கள் ஆக்கிரமிப்பதில்லை. இன்று அவற்றின் பெயர்ப் பலகையை மட்டுமல்லாமல், அந்தக் கடை களுக்குள்ளும் வெளியாட்களே ஆக்கிரமித்து நிரம்பி வழிகிறார்கள். இதனால் சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி போன்ற நடிகைகள் சலூனின் சுவரிலிருந்தும் பலர் மனத்திலிருந்தும் மறைந்துவிட்டார்கள்.
சலூனில் எந்தத் திசையில் திரும்பினாலும் அந்தப் பக்கமே நம் தலையைச் சில நிமிடங்கள் அசையாமல் இருக்கும்படி செய்ய நடிகைகளின் படங்கள் அன்று ஒட்டப்பட்டிருக்கும் தற்போது வந்தவர்களும் பல அழகு சாதனப் பொருட்களை ஏந்தியபடி அயல் நாட்டு விளம்பர மாடல்கள் சலூன் சுவர்களில் செயற்கையாகச் சிரிக்கிறார்கள்.
அன்றைய நாட்களைப் போல் இன்று சலூன்களில் நாம் வியர்வையின் பிசு பிசுப்பை உணர முடிவதில்லை. ஒரு வேளை நாம் அயல்நாட்டில் இருக்கிறோமோ என்று நினைக்கும் அளவுக்குப் பல கடைகள் குளிரில் உறைய வைக்கின்றன. 1980-90-களில் என்ன ஸ்டைல் சொன்னாலும் முடி திருத்துபவர் முடியாது என்று சொல்லாமல், அதை ஒரு சவாலாக ஏற்று முடி வெட்டுவார்கள். கண்ணாடியைப் பார்க்கும்போதுதான், நாம் சொன்னதற்கும் அவர்கள் வெட்டியதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பது தெரியும். அது தனி சோகக் கதை, பாஸ். ‘அட்டக்கத்தி’ தினேஷ் போன்று கைக்குட்டையால் தலையை மறைத்துக்கொண்டு ஆற்றாமையுடன் திரிந்தவர்கள் அன்று ஏராளம்.
இன்று அப்படியில்லை. சுருட்டை முடியை நேராக மாற்றுகிறார்கள். நேரான முடியைச் சுருட்டை முடியாக்குகிறார்கள். கறுப்பு முடியை பான்ப்ராக் எச்சிலில் முக்கி எடுத்த நிறத்தில் மாற்றுகிறார்கள். பாதி மொட்டை, பின் தலை மொட்டை, பக்கவாட்டு மொட்டை என விதவிதமாக இன்று மொட்டையடிக்கிறார்கள்.
அன்றைய நாட்களில், முடி திருத்துபவர்களுடன் இளைஞர்கள் பேசாத விஷயமே கிடையாது. முடி திருத்துபவர்களுக்கும் தெரியாத ரகசியமே கிடையாது. பெரும்பாலும் அவர்களே அன்றைய இளைஞர்களுக்கு நட்பாக இருந்தனர்
இன்று அவர்களுடன் வெறுமனே பேசுவதே பெரிய விஷயம்தான். இன்று பெரும்பாலும் வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவரே முடி திருத்துபவராக இருப்பதால், எப்படி முடி வெட்ட வேண்டும் என்பதைக்கூட சைகையால் உணர்த்தி, வேலைக்காரன் ரஜினியைப் போன்று ‘யெஸ்’, ‘நோ’ என்று சொல்லும் நிலையே உள்ளது. இறுதியில் பில்லைப் பார்த்து வாய்விட்டுத் திட்டக்கூட முடியாமல் வார்த்தைகளோடு சேர்த்து கோபத்தையும் விழுங்கிக்கொண்டு செல்லும் நிலை சோகமானதே.
இன்றைய நவீன சலூன் கடைகள் எல்லாவற்றையும் ஒரு சேர மாற்றிவிட்டன.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்