திருநெல்வேலி தென்காசி பத்திரப்பதிவு மாவட்டங்களில் பெருகி வரும் போலி பத்திரப்பதிவுகள் நான்காண்டுகளாக பதிவான பத்திரங்களை மறுதணிக்கை செய்திட உத்தரவு போட்ட. பத்திரப்பதிவு துறை. அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இலட்சக்கணக்கில் பதிவுத்துறையில் முறைகேடுகள் நடந்துள்ளது. பத்திரப்பதிவுதுறையின் நெல்லை மண்டலமானது ஏழு பதிவு மாவட்டங்களுடன் தென்காசி, சேரன்மகாதேவி, நெல்லை, பாளையங்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மார்த்தாண்டம். மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கணக்கான பத்திரப்பதிவுகள் நடக்கிறது
திருநெல்வேலி, தென்காசி வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகப்படியான போலி பத்திரப் பதிவுகள் நடைப்பெற்று வருவதாக அதிகாரிகளுக்கு தகவல்கள் சென்றன. அதன்பேரில் தமிழக பத்திரப்பதிவு துறைத் தலைவர் ஜோதி நிர்மலா திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டான் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கடந்த பத்து தினங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டு முறைகேடுகளைக் கண்டுபிடித்தார். இதற்காக அங்குள்ள அலுவலக பதிவு அலுவலர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இதன் பின்னணியில் முறைகேடுகள் குறித்த தகவல்கள் வெளிவந்தன. நிலங்களுக்கான அசல் சான்றுகள் இல்லாமல் சிலர் பத்திரப்பதிவு மேற்கொண்டது தெரிய வந்தது.
குறிப்பாக ஒருவர் அசல் ஆவணத்தை தொலைத்துவிட்டதாக கூறி காவல்துறையில் புகார் செய்து, அதற்கான விளம்பரங்கள் செய்து ஆள் மாறாட்டமும் செய்து பத்திரங்களைப் பதிவு செய்திருப்பது கண்டறியப்பட்டது. இதுமட்டுமின்றி இரு வேறு சார்பதிவாளர் எல்கைக்கு உட்பட்ட இடங்களுக்கான பத்திரப்பதிவை ஒரே பத்திரம் மூலம் செய்திருப்பதும் தெரிய வந்தது. இதையெல்லாம் தாண்டி தென்காசி மாவட்டம் சுரண்டையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான காவல்துறைக்கு சொந்தமான இடத்தை போலி பத்திரம் மூலம் விற்ற சம்பவமும் நடந்துள்ளது
சுரண்டை, சங்கரன்கோவில் ரோட்டில் காவல்துறைக்கு சொந்தமாக 2.15 ஏக்கர் காலியிடத்தில் அங்கு எழுதி வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை மர்மநபர்கள் கிழித்து தனியாருக்கு விற்பனை செய்துவிட்டனர். சுரண்டை கிராமநிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் நிலத்தை மோசடியாக விற்ற ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். தென்காசி பத்திர பதிவு மாவட்டத்தில் காவல்துறை இடத்திற்கு கூட பாதுகாப்பில்லை என்ற சூழல் உருவானது. இந்நிலையில் நடந்த சம்பவங்கள் குறித்து சென்னை பத்திரப்பதிவு உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி, தென்காசி வருவாய் மாவட்டங்களில் போலி பத்திர பதிவுகள் பெருகி வருவதும், சார்பதிவாளர் அலுவலகங்களில் அனுமதியற்ற பிளாட்டுகளை எளிதாக பதிவு செய்வதும் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கேரளா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்து டிரஸ்ட் பெயரில் கிளை விரித்து பல ஏக்கர் நிலங்களை வாரிசுருட்டுவதும், அதற்காக போலி பத்திரப்பதிவுகளை மேற்கொள்வதும் விசாரணையில் தெரிய வந்தது. சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு அதிகாரி நேர்மையாக நடந்து கொண்டாலும், அவர் விடுமுறையில் செல்லும்போது வில்லங்க பத்திரங்கள் அதிகரித்து வருவது கண்கூடாக கண்டறியப்பட்டது.
திருநெல்வேலி, தென்காசி வருவாய் மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பெருகி வரும் போலி பத்திரப் பதிவுகள் குறித்து உரிய விசாரணை நடத்த அதிகாரிகள் தற்போது உத்தரவிட்டுள்ளனர். முதற்கட்டமாக தென்காசி பத்திரபதிவு மாவட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர், புளியங்குடி சார்பதிவாளர் அலுவலகங்களிலும், திருநெல்வேலி பத்திரப்பதிவு மாவட்டத்திற்குட்பட்ட கங்கைகொண்டான் சார்பதிவாளர் அலுவலகத்திலும் கடந்த நான்காண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள பத்திரங்களை மறுஆய்வு செய்திட உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் பதிவுத்துறை ஊழியர்கள் மத்தியில் கலக்கம் தப்பு செய்தவர்கள் தண்டிக்க வேண்டும என்பதே அனைவரின் எதிரபார்ப்பு இதே நிலை விரைவில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் நடக்கும் தற்போது ஊழல் தானே அங்கு தடையாக உள்ளன
கருத்துகள்