முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாவட்டச் செயலாளர்  பொறுப்பிலிருந்து நீக்கம்
விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளரான அவரை  நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி  ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்
விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
தமிழக பால்வளத்துறை அமைச்சராகவும், இருப்பவர்  சர்ச்சைக்கு பெயர் போன இவர், பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளையும், ரஜினிக்கு ஆதரவான கருத்துகளையும் அண்மைகாலமாக தெரிவித்து வருகிறார். மோடி எங்கள் டாடி என்று கூறும் அளவிற்கு பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பட்டை கொண்டவர்.
அதுதவிர, சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளையும் அதிகமாக தெரிவித்து வந்த ராஜேந்திர பாலாஜி. நாங்குநேரி இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த போது, தன்னை பார்க்க வந்த சிறுபான்மையின மக்களை பார்த்து "மோடியுடன் நாங்கள் இருப்பதால், நீங்களும், கிறித்தவர்களும் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டீர்கள். உங்களுக்கு எதற்கு நாங்க செய்யனும்? காஷ்மீர் போல உங்களை ஒதுக்கி வைக்கனும்” என சர்ச்சைக்குரிய வகையில் இவர் பேசியதாக குற்றச்சாட்டு அப்போது  எழுந்தது.
உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் தலைவர் பதவிக்கான ஏலம் விடும் விவகாரம் பூதாகரமான நிலையில், ஊராட்சித் தலைவர் பதவிக்கான ஏலம் ஆண்டாண்டு காலமாக நடக்கிறது என்றார் ராஜேந்திர பாலாஜி. ஒரு  இதழில் அமைச்சர் ராஜேந்திர பலாஜிக்கும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ வர்மனுக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை நிலவுவதாக செய்தி வெளியிட்ட செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அதிமுகவினர் இருவர் கைது செய்யப்பட்டனர். அப்போதும் இவரது பெயர் அடிபட்டது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், ஆகியோர் இணைந்து  வெளியிட்டுள்ளனர். அதில், எந்த காரணத்துக்காக நீக்கப்படுகிறார் என்பது குறித்த தகவல் இல்லை.
சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் கட்சி பொறுப்பில் இருந்து ராஜேந்திர பாலாஜி நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, பேரவை நடைபெறும் சமயங்களில் அமைச்சர் பதவியில் இருந்து ஒருவரை நீக்குவதோ, சேர்த்தலோ இருக்காது. எனவே, தற்போது கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு, கூட்டத்தொடருக்கு பின்னர் ராஜேந்திர பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு என கூறப்படுகிறது.விருதுநகர் 1995 க்குப் பின் மாவட்டத்தில் அடிமட்டத்தில் இருந்து பல தில்லாலங்கடி வேலைகளைச் செய்து இந்தப்‌பதவிக்கு வந்தவர் என்பது வரலாறு.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள குருந்தமடம் என்ற குக்கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர், பள்ளிகாலத்திலேயே எம்.ஜி.ஆரின்.தீவிர ரசிகர் என்பதால் அவர் நடிப்பில் வெளியாகும் படங்களை ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவார். மேலும், எம்.ஜி.ஆர். திரைப்பட போஸ்டர்களை தாமே சுவர்களில் ஒட்டி தனது தலைவன் புகழை பரப்பியுள்ளார்.விஷ்வகர்மா சமூகத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ராஜேந்திரபாலஜி முக்குலத்தோரும் நாடாரும் நாயக்கரும் கலந்து வாழும் பகுதியில் இவ்வளவு காலம் ஆளும் கட்சியில் மாவட்டச் செயலாளராக இருந்ததே பெரியது . அதிமுகவில் சாதாரண அடிப்படை உறுப்பினராக பதிவு செய்து கொண்ட இவர், திருத்தங்கள் பஞ்சாயத்து துணைத் தலைவராக 1996-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருத்தங்கல் நகராட்சியாக மாற்றப்பட்டதை அடுத்து நகராட்சி துணைத்தலைவராக இருந்த இவருக்கு எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற கனவு எட்டிப்பார்த்தது. இதனால் அப்போதைய மாவட்டச்செயலாளர்கள் பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் போன்றோரின் குட்புக்கில் இடம் பிடித்து கட்சியில் படிப்படியாக வளர்ச்சியடைந்து, விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஆனார். இளம் வயது முதலே துடுக்காக பேசுவது ராஜேந்திரபாலாஜியின் வழக்கம். கருணாநிதியையும், திமுகவையும் அதிமுக மேடைகளில் இவர் விமர்சித்த தொணிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
ராஜேந்திரன் என்ற பெயரை நியூமராலஜி படி ராஜேந்திரபாலாஜி என பெயரை மாற்றிக்கொண்டு அந்த பெயரிலேயே சிவகாசி தொகுதிக்கு சீட் கேட்டு கடந்த 2011-ல் விண்ணப்பம் செய்தார். அதிர்ஷடக்காற்றும், சசிகலாவின் பரிபூரண பரிந்துரையும் அவருக்கு எம்.எல்.ஏ சீட் பெற்றுக்கொடுத்து அமைச்சராகவும் ஆக்கியது. இதுமட்டுமல்லாமல் மாவட்டச் செயலாளர் பதவியையும் கூடவே பரிசாக கொடுத்தார் ஜெயலலிதா. அன்றிருந்து இன்று வரை சுமார் 10 ஆண்டுகாலம் விருதுநகர் மாவட்டச் செயலாளராக இருந்து வந்த ராஜேந்திரபாலாஜியின் கட்சி பதவி இன்று பறிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...