முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சீனத்துத் தலையாட்டிப் பொம்மையா WHO தலைவர் டெட்ராஸ்

உலக சுகாதார மையம்.WHO
இதன் தலைவராக அதாவது இயக்குநர் ஜெனரலாக, 2017 ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் டெட்ராஸ்.எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்தவரான இவர் மருத்துவத்தில் டாக்டர் அல்ல. பொது சுகாதாரத்தில் டாக்டரேட் வாங்கியவர்.எத்தியோப்பியாவில் உள்ள மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி எனும் கட்சியைச் சேர்ந்தவர். அங்கு .சுகாதார அமைச்சராகவும்,வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தவர். சீனாவோடு மிக நெருங்கிய நட்புடையவர்.2017 ல் சீனாவின் பலத்த ஆதரவோடு.உலக சுகாதார மையத்திற்குத் தலைவரானார்.
பின் 2019 ல்.. சீனா.உலக சுகாதார மையத்திற்கு அதுவரை இல்லாத அளவிற்கு .86 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது.மேலும்  தானாக முன்வந்தளிக்கும் நன்கொடைப் பெயரில் பத்து  மில்லியன் அமெரிக்க டாலர்களை அளித்தது.
இதன் மூலம், ஒட்டுமொத்த உலக சுகாதார மையத்தையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் சீனா கொண்டுவந்ததென பலரும் உணர்ந்தனர்.உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ராஸ், தன் செயல்பாடுகளின் மூலம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.உலக சுகாதார மையத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன்.சீனத்து ஊடகங்களிடம். உலக சுகாதார மையமும், தானும் .ஒரே சீனா' என்கிற கொள்கையையும், அதன் பெய்ஜிங் தலைமையையும் தொடர்ந்து முழுமையாக ஆதரிப்போம் என பேட்டியளித்தார்.
சீன வைரஸ் விஷயத்தில் அவர் எடுத்த சீன ஆதரவு.இன்று       உலக மக்களை பேராபத்தில் ஆழ்த்தியும், வீழ்த்தியுமிருக்கிறது.
இவருடைய சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளைப் பார்த்தால் புரியும். அதில் முதலாவது விபரம்:
2019 டிசம்பர் மாதத்திலேயே தைவான் நாட்டின் சார்பில் சீனாவின் வுஹான் மாகாணத்தின் கொரானா எனும் கோவிட்-19 வைரஸ். மனிதனிலிருந்து மனிதனுக்கு தொற்றக்கூடியது. ஆபத்தானது. இது குறித்து உலக நாடுகளுக்கு உடனடியாக எச்சரிக்கை செய்ய வேண்டும் என உலக சுகாதார மையத்திடம் கவனப்படுத்தியும்.பொதுவாக எச்சரிக்கிறது.
ஆனால்.  சீனத்தின் ஆதரவு டெட்ராஸ் அதனைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தினார்,
இரண்டாவது விபரம்: 2020 ஜனவரி 14 மாலையில் ட்விட்டரில்..''சீன அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில்...வுஹானில் உள்ள கொரோனா வைரஸ். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதருக்கு தொற்றுவது அல்ல என தெரியவந்திருக்கிறது' என. உலக சுகாதார நிறுவனம்  அறிவிக்கிறது .
முன்றாவது விபரம்: 2020 ஜனவரி 28 ல் சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்று அதிபர் ஜீ ஜின்பிங்கைச்  சந்திக்கிறார் டெட்ராஸ். இச் சந்திப்புக்குப் பின் ஜின்பிங் முன் கருத்து கூறுகிறார். ''நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில்.சீனா ஒரு புதிய சரித்திரம் படைத்திருக்கிறது. உலக சுகாதார மையத்துடனும், பிற உலக நாடுகளுடனும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் சீனா நடந்துகொள்கிறது'' என செய்தியாளர்கள் முன் பாராட்டிப் பேசுகிறார்.டெட்ராஸ்.
அடுத்த விபரம் : வுஹானில் பரவும் தொற்றைக் கண்டு அமெரிக்கா உட்பட உலக நாடுகள் சீனாவிற்கு செல்ல வேண்டாம் என்று தம் மக்களுக்கு அறிவிக்கும் போதும்.....'' இதை அரசியலாக்குவதும், சீனாவை புறக்கணிப்பதும் தவறு '' என்று கண்டித்து உடனடியாக அறிக்கை வெளியிடுகிறார்WHO அமைப்பின் தலைவர் டெட்ராஸ்.                 நான்காவது விபரம்: ஜனவரி 23 ஆம் தேதி உலக சுகாதார மையத்தின் அவசரக் கூட்டம் நடந்தது. அதில். கொரோனா வைரஸ் குறித்த 'உலக சுகாதார அவசர நிலையாக' அறிவிக்குமாறு எடுக்கப்படும் முடிவில்.. இறுதி முடிவாக அதை செயல்படுத்த வேண்டிய தலைவர் டெட்ராஸ்.அதை அறிவிக்காமல். மேலும் தள்ளிபோடுகிறார். ஐந்தாாவது  விபரம்: சந்தேகத்திற்குரிய ,தேவையற்ற தாமதத்திற்குப் பின் உலக சுகாதார அவசரநிலை என்று WHO ன் தலைவரான டெட்ராஸ் அறிவிக்கும்போது.உலக நாடுகள் பலவற்றுக்கும் 7,700 பேருக்கு மேல் வைரஸ் தொற்று பரவியிருந்தது தான் உண்மை நிலை.
ஆறாவது விபரம்: உலக சுகாதார மையத்தின் தலைவராக பொறுப்பான முறையில் தன் கடமையை செய்யாமல் சீன ஆதரவாளராக...சீனாவை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியது ஏன்? என்ற கேள்வியை ஜெனீவாவில் ஊடகங்கள் கேட்டபோது.
'' சீனா பொய் சொல்லியதா? மறைத்ததா ? என்ன செய்தது ? போன்ற கேள்விகளை விட்டு விட்டு.அந்த வினாக்களைக் கடந்து உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் தொற்றை தடுப்பது எப்படி என்பதில் கவனம் செலுத்துங்கள்'' என்று மட்டுமே  பதில் சொன்னார் டெட்ராஸ்.இதற்குப் பிறகு தான்.விருதுகள் பல வாங்கி யிருக்கும் புரட்சிகர டாக்டர். டெட்ராஸ்- ஐ WHO தலைமை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்கிற குரல்கள் உலககெங்கும் ஒலிக்கத் தொடங்கி இருக்கின் றன.  ஆக வைரஸ் ஏனும் மறைமுகமாக ஒரு யுத்தம் சந்திக்கவும் முதல் முறையாக நாமும்  ஊரடங்கில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட மக்களில் ஒருவராகக் காரணம் இதுவே.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...