முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பத்துப் பழம்பெருச்சாளிகளில் வேலூரில் பிடிபட்ட ஒரு இலஞ்சப் பெருச்சாளி

    ம்பதாயிரம் இலஞ்சம் வாங்கிய வேலூர் மாவட்ட தனித்துணை ஆட்சியர்(முத்திரை) ஓட்டுநருடன் 
இலஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகேயுள்ள இரும்புலி கிராமத்தைச் சேர்ந்த 31 வயதான ரஞ்சித்குமார் ஒரு விவசாயி.அவரது தந்தை முருகன், அத்தை மகன் ராஜவேலு ஆகியோர் பெயரில் இருக்கும் 1.47 ஏக்கர் பூர்வீக விவசாய நிலத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கண்ணமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் தனது பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். இதற்காக அரசின் நில வழிகாட்டு மதிப்பின்படி பத்திரங்களை வாங்கி பதிவு செய்துள்ளார்.
ஆனால், இந்த முத்திரை கட்டணம் குறைவு எனக்கூறி கண்ணமங்கலம் சார் பதிவாளர் மணிகண்டன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மேல் முறையீட்டுக்காக வேலூர் மாவட்ட முத்திரை கட்டண தனித்துணை ஆட்சியருக்கு அனுப்பியுள்ளார். மேலும், நிலத்துக்கான பத்திரத்தையும் அவர் ரஞ்சித்குமார் வசம் விடுவிக்காமல் நிறுத்தி வைத்தார்.
இதற்கிடையில், குறை முத்திரைக் கட்டணம் புகார் தொடர்பாக ரஞ்சித் குமாருக்கு வேலூர் மாவட்ட முத்திரை கட்டண தனித்துணை ஆட்சியர் தினகரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன்படி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தினகரனின் அலுவலகத்துக்குச் சென்ற ரஞ்சித் குமார், பாக்கி  முத்திரைக் கட்டணம் புகார் குறித்துப் பேசியுள்ளார்.
அப்போது, குறை முத்திரை கட்டண விவகாரத்தை சுமூகமாக முடிப்பதுடன் பத்திரத்தை விடுவிக்க ரூ.ஐம்பதாயிரம் பணத்தை தனக்கு லஞ்சமாக அளிக்க வேண்டும் என தினகரன் கேட்டுள்ளார். இவ்வளவு தொகையை அளிக்க முடியாமல் ரஞ்சித் குமார் அமைதியாகி விட்டார்.
இதற்கிடையில், தினகரன், வேலூர் மாவட்ட அலுவல் ஆய்வுக்குழு அலுவலராக கடந்த ஜனவரி மாதம் இறுதியில் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அந்த பதவிக்குச் செல்லாமல் இதே பதவியில் தொடர்ந்துள்ளார். மேலும் குறை முத்திரைக் கட்டணம் தொடர்பாக வரப்பெற்றுள்ள புகார் மனுக்களின் நிலுவையில் உள்ள கோப்புகள் அனைத்தையும் விரைந்து முடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
இதற்காக, திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த தனது கார் ஓட்டுநர் ரமேஷ்குமார் (44) என்பவர் மூலமாக அனைவரையும் செல்போனில் தொடர்புகொண்டு நிலுவையில் இருக்கும் கோப்புகளை முடித்துக்கொள்ளும்படி கூறியுள்ளார். ரஞ்சித் குமாருக்கும் இதே தகவலை ஓட்டுநர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தினகரனை சந்தித்து தனது பிரச்சினையை முடிக்கும்படி ரஞ்சித் குமார் கேட்டுள்ளார். அப்போது, பணத்தை கொடுத்தால் பிரச்சினை இருக்காது என்றும் இல்லாவிட்டால் அபராதத் தொகை அதிகமாக செலுத்த நேரிடும் எனவும் தினகரன் கூறியுள்ளார். வேறு வழியில்லாமல் அவர் கேட்டபடி ரூ.ஐம்பதாயிரம் பணத்தைக் கொடுக்க ரஞ்சித்குமார் ஒப்புக்கொண்டார். இருந்தாலும் பணத்தைக் கொடுக்க மனமில்லாமல் வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின்பேரில், அவரிடம் பினாப்தலின் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்தனுப்பினர். மேலும், அவரை பின்தொடர்ந்தனர். அந்தப் பணத்தைக் கொடுக்க வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ரஞ்சித்குமார் பிப்ரவரி 28 இரவு சென்றார். அலுவலகத்தில் அவர் இல்லை. செல்போனில் தொடர்புகொண்டபோது குடியாத்தம் பகுதியில் ஆய்வுக்காக சென்றிருப்பதால் வருவதற்கு தாமதமாகும் என்று கூறியதுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகேயுள்ள ஏடிஎம் மையம் அருகில் காத்திருக்கும்படி தினகரன் கூறியுள்ளார். கார் ஓட்டுநர் ரமேஷ்குமார்
நேற்று இரவு பத்து மணியளவில் அவரது சொந்த காரில் ஓட்டுநர் ரமேஷ்குமாருடன் வந்த தினகரன், பணத்துடன் காத்திருந்த ரஞ்சித் குமாரை தனது காரில் ஏற்றிக்கொண்டார். இதைப் பார்த்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் அந்த காரை பின்தொடர்ந்தனர். காரில் இருந்தபடி ரூ ஐம்பதாயிரம்  ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்ட தினகரன், புதிய பேருந்து நிலையம் அருகே அவரை இறக்கிவிட்டுச் சென்றார். பணத்தை தினகரன் வாங்கிவிட்டார் என்பதை ரஞ்சித் குமார் மூலம் போலீஸார் உறுதி செய்துகொண்டதும் அந்த காரை மீண்டும் பின்தொடர்ந்தனர். வேகமாகச் சென்ற காரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுமார் 3 கி.மீ். தொலைவுக்கு விரட்டிச் சென்று மடக்கி வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் அருகேயுள்ள சர்வீஸ் சாலையில்  பிடித்தனர்.
காருடன் அவரை அருகில் இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி தேவநாதன் தலைமையில் ஆய்வாளர்கள் ரஜினிகாந்த், விஜய், விஜயலட்சுமி தலைமையில் விசாரணை நடைபெற்றது. மேலும், தினகரனின் காரை சோதனையிட்டதில் ரஞ்சித் குமாரிடம் வாங்கிய ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சப் பணத்துடன் கணக்கில் வராத பணம் மொத்தம் ரூ.2.44 லட்சம் இருந்தது தெரியவந்தது. இந்தப் பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், தனித்துணை ஆட்சியர் தினகரன் மற்றும் அவரது ஓட்டுநர் ரமேஷ்குமாரையும் பிப்ரவரி.29 அன்று  அதிகாலை கைது செய்தனர்.
விழா அனுமதிக்கு லஞ்சம்
வேலூர் மாவட்ட முத்திரை கட்டண தனித்துணை ஆட்சியர் தினகரன் (47). இவர் கடந்த ஒன்றரை மாதமாக புதிதாக ஏற்படுத்தப்பட்ட குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் பணியை கூடுதலாக கவனித்து வந்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நடத்த வருவாய் துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர். அதன்படி எருதுவிடும் விழா நடத்தும் பகுதிகளை வருவாய் கோட்டாட்சியர் என்ற முறையில் தினகரன் தான் நேரில் ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும். இந்த ஆய்வின்போது லஞ்சப்பணம் வாங்கிக்கொண்டே அவர் அனுமதி அளித்து வந்துள்ளார்.
தனி வாகன ஓட்டுநர்
துணை ஆட்சியருக்கு அரசு வழங்கிய வாகனத்துடன் ஓட்டுநர் ஒருவருக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், அரசு ஓட்டுநரைவிட தினகரனின் சொந்த வாகன ஓட்டுநரான ரமேஷ்குமார் தான் அதிக நேரம் உடனிருப்பார். தினகரனின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் என்பதால் தனது சொந்த ஊரைச் சேர்ந்த ரமேஷ்குமாரை தனது ஆஸ்தான வாகன ஓட்டுநராக நியமித்து மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கி வந்துள்ளார். தினகரன் வாங்கும் லஞ்சப்பணம் விவகாரம் முழுவதையும் ரமேஷ்குமார்தான் கையாண்டுள்ளார் என்று காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓட்டுநருடன் கைதான தினகரன் கடந்த ஒரு மாதத்தில் எவ்வளவு கோப்புகளை பணம் பெற்றுக்கொண்டு முடித்துள்ளார் என்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...