அனைத்து நாட்டையும் அச்சத்தால் கொல்லும் கொரோனா
உலகிலுள்ள அனைத்துந நாடுகளும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. இதற்கு முன் இப்படியொரு நெருக்கடியை எதிர்கொள்ளாததால், இதைக் கையாளுவதற்கான அனுபவம் நம்மிடம் இல்லை' என, உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ் கூறியதாவது,
கொரோனா இதுவரை கண்டிராத ஒரு தனித்துவம் வாய்ந்த வைரஸ். நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும், 3,000க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவைத் தாண்டி உலகின் மற்ற நாடுகளில் கொரோனா வைரசால், 8,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஈரான், தென் கொரியா, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் மட்டும் 81 சதவீதம் பேர் உள்ளனர்.ஈரானில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், அமெரிக்காவில் மேலும் நான்கு பேர் இந்த வைரசால் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
பிரான்சில் நேற்று ஒரேநாளில் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, 191 ஆக உயர்ந்துள்ளது. பிரிட்டனில் 39 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஐஸ்லாந்து, போர்ச்சுக்கல், ஜோர்டான், துனீசியா, அர்மேனியா, லாத்வியா, செனிகல் உள்ளிட்ட ஏழு நாடுகளில் நேற்று முதல்முறையாக கொரோனா வைரஸ் பதிவாகியுள்ளது.
உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. இப்படி நெருக்கடியை எதிர்கொள்ளாததால், இதைக் கையாளுவதற்கான முன் அனுபவம் நம்மிடம் இல்லை. இருந்தும் நாம் இந்த வைரசைக் கண்டு அஞ்சி ஒடுங்கக் கூடாது. இதற்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே இதை வீழ்த்த முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார.கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைகுலைந்த சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில், கைவிடப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருவதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்தியாவில் அதன் தாக்கம் இருப்பது குறித்து தகவல் வருவது பல வகையில் மக்கள் அச்சம் கொள்ளும் நிலை ஆக்ராவில் ஆறுநபர்கள் கேரளத்தில் மூன்று என தகவல் வரும் சூழலில் அரசு பலவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏடுத்து வருகிறதுஹைதராபாத்தில் கொரோனா: கண்காணிப்பில் 80 பேர் கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளதா என்பதைக் கண்டறிய ஹைதராபாத்தில் 80 பேர் கண்காணிப்ப்பில் உள்ளனர்.
கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து தற்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள நிலையில் இந்தியாவிலும் இரண்டு பேருக்கு வைரஸ் தாக்குதல் இருப்பதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் டெல்லியைச் சேர்ந்தவர், மற்றொருவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். ஹைதராபாத்தைச் சேர்ந்த 24 வயது மென் பொறியாளர் பெங்களூரிலிருந்து ஹைதராபாத்துக்கு பேருந்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஹைதரபாத்தின் மகேந்திரஹில்ஸ் பகுதியில் தங்கியிருந்தார். அதன்பின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அங்கிருந்து காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபின், புனேயிலிருந்து வந்த அறிக்கையின்படி அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தகவல்களை தெலங்கானாவின் சுகாதாரத் துறை அமைச்சர் எட்லா ராஜேந்தர் கூறியுள்ளார்.
திருப்பதியில் கொரோனா பாதிப்போடு தனிமையில் ஒருவர்.பொறியாளருடன் பேருந்தில் பயணித்தவர்கள், குடும்பத்தினர், அப்பல்லோ மருத்துவர்கள், ஊழியர்கள் என 80 பேரை கண்டறிந்து அவர்களையும் கண்காணித்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மீட்கக் கோரும் 85 இந்திய மாணவர்கள்
கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3100ஐ கடந்துள்ள நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்