குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின் காரணமாக வன்முறையை தூண்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தை ஈரோடு பா.ஜ.க.வினர் நடத்தினார்கள். ஈரோட்டில் நடந்த ஊர்வலத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பா.ஜ.க.வின் தேசிய இளைஞரணி துணை தலைவர் முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசும் போது, "குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முன்பே பிரதமர் மிகத் தெளிவாக விளக்கி விட்டார். இந்த சட்டத்தால் 130 கோடி இந்திய மக்களுக்கு எந்த வித பாதிப்பும் வராது. ஆனால் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இந்தச் சட்டம் குறித்து தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி அரசியலாதாயம் தேடுகிறார்கள். மக்களிடையே அவர்கள் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.ஏனத் தெரிவித்தார் அது போல பல மாவட்ட அளவில் நடந்தது.அமைதியாக இருக்கும் தமிழகத்தில் டெல்லி போன்று கலவரம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். தமிழகத்திலும் இந்த சட்டத்தால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவே குடியுரிமை சட்டத் திருத்தத்தின் பெயரில் தமிழகத்தில் வன்முறையை தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று பேரணி நடத்துகிறோம்" என்றார்.முலலக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் குடியுரிமை சட்டத்தின் பெயரில் தமிழகத்தில் வன்முறையை தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர். பாஜகவினர் இந்த ஊர்வலத்தையொட்டி ஈரோடு பெருந்துறை சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. பெருந்துறையில் இருந்து ஈரோடுக்கு வரும் வாகனங்கள் சம்பத் நகர் வழியாக திருப்பி விடப்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரம் ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்