கொரானா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பிரத்யேக ரோபோக்களை வடிவமைத் துள்ளது திருச்சியைச் சேர்ந்த புரொப்பலர் நிறுவனம். நோயாளிகளுக்கு மருந்துகள், உணவுகளை வழங்க இந்த ரோபோக்களை பயன்படுத்தலாம். இந்த ரோபோ செயல்படும் முறையை இந்த நிறுவனத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியரிம் விவரிக்க, அதைப் பயன்படுத்த ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரானா தொற்று இரண்டாம் கட்டத்திலிருந்து மூன்றாம் கட்டத்திற்கு செல்லாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கொரானா பாதிப்புக்கு உள்ளானவர்களின் வீடுகளைச் சுற்றி 7 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளவர்களுக்கு சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்ட 19 பேரின் வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.இரண்டு நிலைகளாக நடைபெறும் இந்த ஆய்வில், அந்தப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற கொரானா தொற்று அறிகுறிகள் இருக்கிறதா என்று மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொள்கின் றனர்.கொரானா தடுப்பு நடவடிக்கைக்கு ரோபோக்களை இலவசமாக தருகிறோம்” -தாமாக முன்வந்த திருச்சி ரோபோட்டிக் நிறுவனம்
தமிழகத்திலும், இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளது. மேலும் பல்லாயிரம் பேர் வீட்டிலும், மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இப்படி இருக்கையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிகிச்சை அளிப்பது மிகவும் சவாலான நிலைக்கு தள்ளப்படும் நிலை ஏற்படலாம். அதிலும், மருத்துவ மற்றும் தூய்மை பணியாளர்களே வெகுவாக சிரமம் மேற்கொள்ளலாம்.
ஆகையால் இதற்கு நிவாரணமாக திருச்சியைச் சேர்ந்த தனியார் ரோபோட்டிக் நிறுவனம் ஒன்று தாமாக முன்வந்து தான் தயாரித்துள்ள ரோபோக்களை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
ட்ரோன், ரோபோ போன்றவற்றை தயாரித்து வரும் புரபெல்லர் டெக்னாலஜிஸ் என்ற ரோபோட்டிக் நிறுவனம் ஜாபி மற்றும் ஜாபி மெடிக் என்ற இருவகையான ரோபோக்களை தயாரித்து வருகிறது.
இது தொடர்பாக பேசியுள்ள அந்நிறுவனத்தின் சி.இ.ஓ முகமது ஆஷிக் ரகுமான், மருத்துவ மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாற்றகாக செயல்படக் கூடிய வகையில் ஜாபியும், அத்தியாவசிய பொருட்களை டெலிவரி செய்யக்கூடிய வகையில் ஜாபி மெடிக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
இதில் ஜாபி, மருத்துவர்களுக்கு உதவியாகவும், நோயாளிகளுக்கு தேவையான மருந்து உணவு போன்றவற்றை வழங்க பயன்படுத்தலாம். இது மொபைல் மூலமாகவும், வாய்ஸ் இன்ட்ராக்டிவ் மூலமாகவும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுளது.
அதேபோல, ஜாபி மெடிக் ரோபோ ரோவர் வகையைச் சேர்ந்தவை. இது 1 கி.மீ வரை சுமார் 20 கிலோ பொருட்களை கொண்டு செல்லும் திறனுடையது. இதன் மூலம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும். மேலும், சேனிடைசர் தெளிக்கவும் பயன்படுத்தலாம் என கூறுகிறார் ஆஷிக் ரகுமான்.
கையிருப்பாக ஜாபி ரகத்தில் 9 ரோபோக்களும், ஜாபி மெடிக் ரகத்தில் ஒன்றும் உள்ளது. அரசு அங்கீகரித்தால் இதனை இலவசமாக வழங்கத் தயாராக உள்ளதாகத் தகவல் இதை அரசு ஏற்குமாறு என்பது விரைவில் தெரியும். அப்படி ஏற்றால் இயந்திர மனிதன் விரைவில் வருவான்.
கருத்துகள்