இலங்கை நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மேலும்
இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை ஆறு மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களுக்கு 23ஆம் திகதி காலை ஆறு மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணி தொடக்கம் 24ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
24 ஆம் திகதி மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவது தொடர்பில் அறிவிக்கப்படும்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயம் செய்யும் பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்குமாறு காவல்துறையினருக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.
மரக்கறி உட்பட அத்தியாவசிய பொருட்கள் போதியளவு கையிருப்பில் உள்ளமையினால் மக்கள் குழப்பம், பதற்றம் ஏற்படுத்திக் கொள்ளாமல் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் அரசங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்