அதிபத்தநாயனாருக்கு, சிவபெருமான் காட்சி அளித்தை நினைவுக்கூரும் வகையில், கடலில் தங்க மீன் விடும் வைபவம் ஆண்டு தோரும் நடந்து வருகிறது . முற் காலத்தில், நாகை, நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் பிறந்தவர், அதிபத்தர். சிவன் மீதுள்ள பக்தியால், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது, ஒவ்வொரு நாளும், வலையில் சிக்கும் முதல் மீனை, சிவனை நினைத்து, கடலில் விடுவது அதிபத்தரின் வழக்கம்.சோழ நாட்டில், நாகப்பட்டினத்தில், நுளைப்பாடியிலே, வலைஞர் குலத்திலே அவதரித்தவர் அதிபக்த நாயனார். அவர் பரதவர்களுக்குத் தலைவர். சிவபத்தியில் சிறந்தவர். வலைப்படும் மீன்களில் ஒரு தலைமீனைச் சிவபெருமானுக்கு என்று கடலிலே விடுவது அவரது வழக்கம். வலையில் ஒரே மீன் படினும், அதனைச் சிவபெருமானுக்கு என்றே அவர் கடலில் விடுவார். சிவபெருமான் திருவருளால் நாள்தோறும் ஒவ்வொரு மீனே கிடைப்பது ஆயிற்று. வழக்கம்போல் அதிபத்தர் அதனைக் கடலிலே விட்டு வந்தார். நாயனார் செல்வம் சுருங்கிற்று. சுற்றங்கள் உணவு இன்றி வருந்தின. உணவு இன்மையால் நாயனார் திருமேனியும் மெலிந்தது. அது குறித்து அவர் வருந்தவதில்லை.சிவபத்தியில் மட்டும் நாயனாருக்குத் தளர்ச்சி தோன்றவேயில்லை.ஒரு நாள் வலையில் பொன்மீன் ஒன்றே அகப்பட்டது. அதை வலைஞர்கள், நாயனார் முன்னிலையில் கொண்டு வந்தார்கள். நாயனார் அதைக் கண்டு, "இது என்ன பொன் மீன்? உறுப்புக்களிலும் நவமணிகள் அமைந்திருக்கின்றன. இது சிவபெருமானுக்கு ஆக" என்று அதனையும் கடலிலே விடுத்தார்.
அப்பொழுது சிவபெருமான் நாயனாருக்குக் காட்சி அளித்தார். நாயனார் அகம் குழைந்து தொழுதார். சிவபெருமான் அவருக்குச் சிவலோக வாழ்வு தந்து அருளினார்.
அதிபத்த நாயனார் வழிபட்ட அமுதீசர் திருக்கோயில் நுளைபாடியில் நம்பியார் நகர் பகுதியில் உள்ளது.திபத்தநாயனாருக்கு, சிவபெருமான் காட்சி அளித்தை நினைவுக்கூரும் வகையில், கடலில் தங்க மீன் விடும் வைபவம் ஆண்டு தோரும் நடந்து வருகிறது . முற் காலத்தில், நாகை, நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் பிறந்தவர், அதிபத்தர். சிவன் மீதுள்ள பக்தியால், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது, ஒவ்வொரு நாளும், வலையில் சிக்கும் முதல் மீனை, சிவனை நினைத்து, கடலில் விடுவது அதிபத்தரின் வழக்கம்.சோழ நாட்டில், நாகப்பட்டினத்தில், நுளைப்பாடியிலே, வலைஞர் குலத்திலே அவதரித்தவர் அதிபத்த நாயனார். அவர் பரதவர்களுக்குத் தலைவர். சிவபத்தியில் சிறந்தவர். வலைப்படும் மீன்களில் ஒரு தலைமீனைச் சிவபெருமானுக்கு என்று கடலிலே விடுவது அவரது வழக்கம். வலையில் ஒரே மீன் படினும், அதனைச் சிவபெருமானுக்கு என்றே அவர் கடலில் விடுவார். சிவபெருமான் திருவருளால் நாள்தோறும் ஒவ்வொரு மீனே கிடைப்பது ஆயிற்று. வழக்கம்போல் அதிபத்தர் அதனைக் கடலிலே விட்டு வந்தார்.நாயனார் செல்வம் சுருங்கிற்று.சுற்றங்கள் உணவு இன்றி வருந்தின. உணவு இன்மையால் நாயனார் திருமேனியும் மெலிந்தது. அது குறித்து அவர் வருந்தவதில்லை.சிவபத்தியில் மட்டும் நாயனாருக்குத் தளர்ச்சி தோன்றவேயில்லை.ஒரு நாள் வலையில் பொன்மீன் ஒன்றே அகப்பட்டது. அதை வலைஞர்கள், நாயனார் முன்னிலையில் கொண்டு வந்தார்கள். நாயனார் அதைக் கண்டு, "இது என்ன பொன் மீன்? உறுப்புக்களிலும் நவமணிகள் அமைந்திருக்கின்றன.இது சிவபெருமானுக்கு ஆக" என்று அதனையும் கடலிலே விடுத்தார்.
அப்பொழுது சிவபெருமான் நாயனாருக்குக் காட்சி அளித்தார். நாயனார் அகம் குழைந்து தொழுதார்.சிவபெருமான் அவருக்குச் சிவலோக வாழ்வு தந்து அருளினார்.அதிபத்த நாயனார் வழிபட்ட அமுதீசர் திருக்கோயில் நுளைபாடியில் நம்பியார் நகர் பகுதியில் உள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்