தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், ராஜதானி அருகே ஒத்தவீடு கிராமத்தில், பிறந்து ஆறு நாட்களான பெண் குழந்தையை கொலை செய்ததாக குழந்தையின் தாய் மற்றும் பாட்டியை காவல்துறை கைது செய்தனர்.ஒத்தவீடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ். மனைவி கவிதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கவிதாவிற்கு கடந்த 6 நாட்களுக்கு முன் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தையை கவிதா, அவரது மாமியார் செல்லம்மாள் ஆகியோர் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மொட்டனூத்து கிராம நிர்வாக அலுவலர் தேவி ராஜதானி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் கவிதா, செல்லம்மாள் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்