இந்தியாவில் நள்ளிரவு முதல் ஊரடங்குச் சட்டம் எது அனுமதி, எது தடை விரிவான அறிவிப்புகள் வெளியீடு இந்தியாவில் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் தொடர்பான அனைத்து சந்தேகத்திற்கான விடையாக அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது .ஊரடங்கு உத்தரவை மீறினால் இது தான் தண்டனை. இனி யாராயினும் வெளியில் வருவது தவிர்க்க வேண்டும் .முன்னதாக அனைத்துப் பிரதேசங்களில் விதிகள் மற்றும் சட்டங்களை செயல் படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் கவலை தெரிவித்துள்ளார். கண்டிப்பான ஊரடங்கு உத்தரவை நடைமுறைப் படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது . ஊரடங்கு உத்தரவுகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதாவது உத்தரவை மீறுபவர் களுக்கு ஆறுமாத சிறை தண்டனை அல்லது இந்திய தண்டனைச் சட்டம் 188-ன்படி ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . அதேநேரத்தில் அறிவிக்கப் பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்துமாறும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது . முன்னதாக விதிகள் மற்றும் சட்டங்களை செயல்படுத்தப் படுகின்றனவா என்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் மாநில அரசுகளுக்குக் கொடுக்கும் வழிமுறைகளை தீவிரமாகப் பின்பற்றுங்கள் . விதிகள் மற்றும் சட்டங்கள் அமல்படுத்துவதை உறுதி செய்ய மாநில அரசுகளை மத்திய அரசின் உள்துறை உத்தரவிட்டுள்ளது. 21 நாள்கள் ஊரடங்கையடுத்துச் செயல்படுத்தப்படவுள்ள காலத்தில் பொதுமக்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம்
குறிப்பிட்ட நாள்களில் பொதுமக்களுக்கு எந்தெந்த சேவைகள் கிடைக்கும், எவையெல்லாம் கிடைக்காது என்பது குறித்து வழிகாட்டு தல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதன்படி,
ரேஷன், பால், காய்கறி, இறைச்சி, மருந்து, மளிகை கடைகள் திறந்திருக்கும்.
அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவ னங்கள் வழக்கம் போல்செயல்படும். அத்தியாவசியப் பொருட்களை யேற்றிச் செல்லும் சரக்கு வாகனங் களுக்கு அனுமதி உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள், மருந்துகள் ஆன்லைன் மூலம் பெறலாம்.
உணவு, மருந்துகளை டோர் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி.வங்கிகள், ஏடிஎம்கள், காப்பீடு நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும்.கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கும்.
விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.பெட்ரோல், கேஸ் ஏஜென்சிகள் செயல்படவும், பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்திற்கும் அனுமதி
இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கூடக் கூடாது. பிப்.15க்கு பின் இந்தியா திரும்பியவர்கள் சுகாதாரத்துறை அறிவுரைப் படி தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தலை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்