வேலூர் மாவட்டம்
திருப்பத்தூா் அருகே கரோனா எதிரொலியாக சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராய்லா் கோழிகளை வியாபாரிகள் உயிருடன் ஏரியில் வீசிச் சென்றனா்.கரோனா பாதிப்பால் பிராய்லா் கறிக்கோழி விற்பனை தமிழகத்தில் கடும் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், புதன்கிழமை திருப்பத்தூரை அருகில் உடையாமுத்தூா் கிராமத்திலுள்ள கீழ்குப்பம் ஏரியில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளை வியாபாரிகள் வாகனத்தில் ஏற்றி வந்து உயிருடன் வீசிச் சென்றனா். இதையறிந்த அப்பகுதி மக்கள் கோழிகளை எடுத்துச் சென்றனா். உடையாமுத்தூா் கிராம நிா்வாக அலுவலா் கே.ஸ்ரீபிரியா தகவல் புதன்கிழமை மாலை 5 மணியளவில் உடையாமுத்தூா் கீழ்குப்பம் ஏரியில் உயிருடன் கோழிகளை வேனில் கொண்டுவந்து கொட்டிச் சென்றது குறித்து வட்டாட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கோழிகளை வீசிச் சென்றவா்கள் குறித்து விசாரித்து வருகிறோம் என்றாா்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்