பராமரிப்புப் பணி காரணமாக
திருச்சி வழியாகச் செல்லும் விரைவு ரயில் சேவைகளில் மாற்றம
தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி வழியாக செல்லும் விரைவு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது..
இதுகுறித்து திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் மதுரை ரயில்வே கோட்டப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் காரணமாக, திருச்சி-திருவனந்தபுரம் சென்ட்ரல்-திருச்சி நகரங்களுக்கிடையிலான விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி திருச்சி-திருவனந்தபுரம் சென்ட்ரல் விரைவு ரயில் (வண்டி எண் 22627), திருவனந்தபுரம் சென்ட்ரல்-திருச்சி விரைவு ரயில்( வண்டி எண் 22628) போக்குவரத்தில், மார்ச் 3 ( செவ்வாய்க்கிழமை) முதல் 10- ஆம் தேதி வரை கோவில்பட்டி- திருவனந்தபுரம் இடையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது. எனவே, குறிப்பிட்ட நாள்களில் திருச்சியிலிருந்து கோவில்பட்டி வரை மட்டுமே இந்த ரயில்கள் இயக்கப்படும்.இதுபோல், தாம்பரம்-நாகா்கோவில்-தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (வண்டி எண் 16191) சேவை, மார்ச் 9ம்-ஆம் தேதிவரை திண்டுக்கல்-நாகா்கோவில் இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது .
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்