என் ஜி ஓ களுக்கு வரும் பொது நலன் சார்ந்த வெளிநாட்டு நிதியை, அரசு தடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு தங்களது உரிமைக்காக போராடக்கூடிய பொது மக்களுக்கு உதவி செய்யும் என்ஜிஓ போன்ற அமைப்புகளுக்கு வரக்கூடிய வெளிநாட்டு நிதியை அரசு தடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியது.
வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறைச்) சட்டம், 2010 இன் கீழ் வடிவமைக்கப்பட்ட இரண்டு சர்ச்சைக்குரிய விதிகளை நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.
விதி 3 (v) இன் கீழ், எந்தவொரு அரசியல் கட்சியுடனும் நேரடியாக இணைக்கப்படாத.விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் போன்ற அமைப்புகள், அரசியல் நலன் நோக்கங்களுடன் செயல்பட்டால், வெளிநாட்டு நன்கொடைகள் நிறுத்தப்படலாம் என்று கூறுகிறது.
இதேபோல், விதி 3 (vi) எந்தவொரு அமைப்பும், 'பந்த்' அல்லது 'ஹர்த்தால்', 'சாலை மறியல், 'ரயில் மறியல்' அல்லது 'ஜெயில் நிரப்பும் போராட்டம்' போன்ற அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அந்த அமைப்புக்கும், வெளிநாட்டு மூலங்களிலிருந்து நிதி கிடைப்பதை அரசு தடுக்க முடியும்.
இந்திய சமூக நடவடிக்கை மன்றம் (ஐஎன்எஸ்ஏஎஃப்) அமைப்பு இந்த விதிமுறைகளை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஒரு அமைப்பின் அடிப்படை உரிமையை சட்டம் மீறுவதாக சுட்டிக்காட்டி, சிவில், அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளை ஏற்படுத்த கற்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றின் செயல்பாட்டுக்கான வெளிநாட்டு நிதியை தடுக்க முடியாது என்று இந்த அமைப்பு வழக்கில் தெரிவித்தது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்