தமிழ்த் திரைப்பட நடிகரும், மருத்துவருமான சேதுராமன் நேற்று வியாழக்கிழமை இரவு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இவருக்கு வயது 36.
இவர் 2013ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் பிரபலமானவர் சேதுராமன் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் தமிழ்த் திரைப்படத்துறையில் கால் பதிப்பதற்கு நடிகர் சந்தானம் பெரும் உதவியாக இருந்தார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆத்தங்குடியைச் சேர்ந்தவர் சென்னையில் பிரபல தோல் நோய் மருத்துவராக விளங்கியவர் நடிகர் டாக்டர் சேதுராமன். வயது 36 நேற்று இரவு 11.30 மணிக்கு திடீரென மாரடைப்பால் மாரடைப்பால் காலமானார். கடந்த ஐந்து வருடம் முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. மனைவி உமையாள். 3 மற்றும் 1 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
லட்டு தின்ன ஆசையா படம் உட்பட வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா மற்றும் 50/50 என இதுவரை நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தோல் நோய் மருத்துவரான இவர் சென்னையில் தனியாக கிளினிக் நடத்திவந்தார்.இளம் வயதில் மருத்துவம் படித்த ஒருவர் மாரடைப்பில் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சமூக ஊடகங்களில் அவரது மரணம் தொடர்பான இரங்கல் செய்தி குவிய ஆரம்பித்துள்ளன.
அவருடைய நெருங்கிய நண்பரான சந்தானம் ட்விட்டரில், என் உயிர் நண்பன் சேதுவின் மரணத்தால் தான் அதிர்ச்சியில் உறைந்திருப்பாதகவும், அவருடைய ஆன்மா நிம்மதியடைய பிரார்த்திப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.நடிகர் சதீஷ் ட்விட்டர் பக்கத்தில், மாரடைப்பு காரணமாக நடிகர் மற்றும் மருத்துவர் சேதுராமன் மரணம் அடைந்துவிட்டதாகவும், அவருடைய குடும்பத்துக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும்.
"அவருடைய மரண செய்தியால் அதிர்ச்சியில் இருக்கிறேன். சீக்கிரமாக சென்றுவிட்டார். மிகவும் நல்ல மனிதர்," என்று நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புகைப்பட கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசனும், "கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. சேதுவின் மரணத்தை என்னால் நம்ப முடியவில்லை" என்றும் நடிகை குஷ்பு தன்னுடைய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நீ எங்கள் இதயங்களை உன்னுடைய அமைதியான குணத்தையும் உன் அழகான சிரிப்பையும் நான் நிச்சயம் மிஸ் செய்வேன். நீ திரும்பி வர மாட்டாயா என்று நினைக்கிறேன்" என்று உருக்கமாக பதிவிட்டுள் ளார்.36 வயதில் மாரடைப்பு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபு உள்பட பலர் பதிவிட்டுள்ளார். சேதுராமனின் மரணத்தால் அதிர்ச்சியில்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்