அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளையும் தினமும் காலை மற்றும் இரவில் கிருமிநாசினி மூலம் தவறாமல் சுத்தப்படுத்த வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரானா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து வணிக நிறுவனங்கள், உணவகங்கள், திரையரங்கு உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருன் சக்திகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கைகளை கழுவி சுத்தப்படுத்திக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள இடத்தினை ஆய்வு செய்தார்.
பின் புதுக்கோட்டை இரயில் நிலைய வளாகம் மற்றும் வெளி பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை பார்வையிட்டு, நகராட்சி அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். முன்னதாக ஆட்சியர் உமா மகேஸ்வரி செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அனைவரும் கை கழுவிய பின்னரே மருத்துவமனைக்குள் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதேபோல மருத்துவமனைக்கு வெளியே செல்லும்போதும் கை கழுவுவதுடன், மருத்துவமனையின் அனைத்து பகுதிகளையும் கிருமி நாசினி கொண்டு ½ மணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் அலுவலர்கள் உள்ளே செல்லும் போதும், வெளியே வரும் போதும் கைகழுவ அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதேபோல பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் தவறாமல் கை கழுவுவதுடன், ஏதேனும் நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையினை அணுகவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளையும் தினமும் காலை மற்றும் இரவில் கிருமி நாசினி மூலம் தவறாமல் சுத்தப்படுத்தவும், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் திரையரங்குகளுக்கு வரும் அனைவரையும் கை கழுவ செய்வதுடன், படம் முடிந்தவுடன் இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தவும், திருமண மண்டபங்கள், வணிகவளாகங்கள் போன்ற இடங்களுக்கு வரும்போதும், திரும்பி செல்லும் போதும் தவறாமல் கை கழுவ அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்