முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'சட்டத்தை உருவாக்கி விட்டு அதில் மக்களை அடக்கக் கூடாது'-. நடிகர் விஜய்

        சட்டத்தை உருவாக்கி விட்டு அதில் மக்களை அடக்கக் கூடாது. நடிகர் விஜய் பரபரப்பான பேச்சு.
மக்களுக்கு எது தேவையோ அதைதான் சட்டமாக்கனுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதில் மக்களை அடக்கக் கூடாது என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன்  நடிப்பில் உருவான படம் மாஸ்டர். விஜய் மாமா சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் அனிருத் இசையில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படத்தை ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் தடுக்கப்பட இன்னும் கால அவகாசம் தேவைப்படுமானால் தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் வாய்ப்புள்ளது. எனவே மாஸ்டர் திரைப்படம் அறிவித்தபடி ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.                நடிகர் விஜய் சேதுபதி பேசிய போது மதம் தேவையில்ல; கடவுளை தூர வைக்கிறேன்’ என்றார்  மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காட்சிகள் இது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘ மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா  சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் மாலை 6.30 மணிக்கு தொடங்கிய  நிகழ்ச்சியில் ரசிகர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லாததால்  நிகழ்ச்சியை லைவாக ஒரு தனியார் தொலைக்காட்சி  ஒளிபரப்பு செய்தது.
மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. விஜய் பிகில் மற்றும் மாஸ்டர் படத்திற்கு வாங்கிய சம்பள விபரத்தை வருமான வரித்துறை  வெளியிட்டது. இந்தச் சூழ்நிலையில், விஜய்யின் பேச்சு குறித்து அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.
"எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே. நீ நதிபோல ஓடிக் கொண்டிரு" என்ற பாடல் என் படத்தில் உள்ளது. அதில், வரும் நதியில் சிலர் விளக்கு வைத்து வணங்குவார்கள். சிலர் பூப் போட்டு வரவேற்பார்கள். சிலர் கல் எறிவார்கள். ஆனால், நதி மட்டும் போய்க் கொண்டே இருக்கும். அது போல தான் நாமும் இருக்க வேண்டும்" என்றார் விஜய் 
என்னுடைய மாமாவும், இந்தப் படத்தின் தயாரிப்பாளருமான பிரிட்டோ என்னுடைய ஆரம்ப கால படங்களில் மிகவும் சப்போர்ட்டிவாக இருந்தார். 
படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு சர்பிரைஸ் தான். அவரது மாநகரம் படம் பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டேன். அவர் கைகளில் சீன் பேப்பரே இருக்காது. இதனால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். பிறகு, அவரை கூப்பிட்டு இனி எல்லோர் கையிலும் சீன் பேப்பர் இருக்க வேண்டும் என்று சொல்லிய பிறகு தான் மாறினார்.
ரசிகர்களைப் பார்த்து உற்சாகமான விஜய் சாந்தனுவையும், அனிருத்தையும் அழைத்து நடனமாடினார். பின்னர் பேசுகையில், "என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகளுக்கு வணக்கம். சிம்ரன் ஜீக்கு முதலில் மிகப்பெரிய நன்றி. மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் ரசிகர்கள் கலந்து கொள்ளாமல் போனதில் எனக்கு தான் மிகப்பெரிய வருத்தம். அரை மனசோடு தான் இதுக்கு நான் ஒத்துக்கிட்டேன். கத்திக்கு அப்புறம் நானும், அனிருத்தும் சேர்ந்து பண்ணி இருக்கோம். 
இன்று தவிர்க்க முடியாத இடத்தில் சினிமா உலகில் இருப்பவர் விஜய் சேதுபதி. 
மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி ஏன் நடித்தார் என்று அவரிடமே கேட்டேன். அதற்கு அவர், 'உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்" என்று சொல்லி ஒட்டுமொத்தமாக என்னை ஆஃப் செய்துவிட்டார். அவர் பெயரில் மட்டும் எனக்கு இடம் கொடுக்கவில்லை. அவர் மனதிலும் எனக்கு இடம் கொடுத்துவிட்டார்.இசை வெளியீட்டு விழாவிற்கு நண்பர் அஜித் போல் உடை அணிய வேண்டும் என்று நினைத்தேன் என்று விஜய் தெரிவித்தார்
மதம் தேவையில்லாதது என விஜய் சேதுபதி பேசினார் 
"சாமியை எந்த கூட்டத்துனாலயும் காப்பாத்த முடியாது. சாமி அவர் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்வார். மதத்தின் பெயரால் யார் உங்களை நெருங்கினாலும் தள்ளி வையுங்கள். மதம் தேவை இல்லாதது. அவர்கள் மதத்தைப் பற்றி உங்களிடம் உயர்வாக பேசினார்கள், உங்கள் மதத்தைப் பற்றி பேசாமல், அன்பை பற்றி மனிதத்தை பற்றி பேசுங்கள்" என்று பேசி அதகளம் செய்துவிட்டார்.
விஜய் சேதுபதி பேசுகையில், "விஜய்க்கு close up ஷாட் வையுங்கள், அவர் வெட்கப்பட்டால் மிக அழகாக இருப்பார். இப்படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோ சார் அதிக நேரம் பேசினார் என்று உங்களுக்கு தோன்றி இருக்கலாம். ஆனால், அவரிடம் அவ்வளவு அறிவு இருக்கிறது. அதனால் தான் அதிக நேரம் பேசினார்" என்று சொல்லி விஜய் சேதுபதி ஒரு அரைமணி நேரம் பேசினார். மாஸ்டர் 
படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசுகையில், "நான் இந்த அளவுக்கு வளர்ந்ததுக்கு முக்கிய காரணம் இயேசு சபை. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். விஜய் அவர்கள் தன்னை சுற்றி இருப்பவர்களையும் சேர்த்து வளர்த்து விட வேண்டும் என்ற உயரிய எண்ணம் படைத்தவர். இசையமைப்பாளர் அனிருத்துக்கு உடல் முழுவதும் டேலன்ட் மட்டுமே இருக்கிறது. 
இன்று நிறைய பேர் நாம் சொல்வதை கேட்கவே மாட்டார்கள். ஆனால், விஜய் சேதுபதி நிறைய கேட்பார். He is a good listener. அவருக்கு இருக்கும் அறிவுக்கு காரணம், அவர் மற்றவர்கள் பேசுவதை கூர்ந்து கவனிப்பதால் தான். 
இந்த படம் போன வேகமே தெரியவில்லை. இவ்வளவு சீக்கிரத்தில் இந்த படத்தை முடித்த ரகசியம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு தெரியும். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...