சிட்டுக் குருவி -Sparrow முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினம். பசரீன்கள் குடும்பத்தைச் சார்ந்தவை.இந்தியாவில் இவை வீட்டுக்குருவிகள், அடைக்கலக்குருவிகள் ,ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகளென அழைக்கப்படுகின்றன. காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமானது இக் குருவி.
சிட்டுக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆண், பெண் இரண்டுமே முட்டைகளையும், இளம் உயிரிகளையும் பாதுகாத்து வளர்க்கின்றன. குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளரும்; பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.
மெல்லிய கோடுகளைக் கொண்ட புல்வெளிக் குருவிகள்
மாலைச் சிட்டுகள்
காட்டில் வாழும் நரிச் சிட்டுகள்
வெண்கொண்டையும் வெண்மையான தொண்டையும் கொண்ட குருவிகள்
கறுப்புச் சிட்டுகள்
வெள்ளைக் கோடுகள் உடைய கொண்டையைப் பெற்றவை
வீட்டுச் சிட்டுக்குருவி
என குருவிகளில் பல வகைகள் உள்ளன.
தமிழ் இலக்கியங்களில்
சிட்டுக்குருவியில் இரண்டு இனங்கள் உண்டு.
சிட்டுக்குருவியைச் சிய்யான் குருவி என்றும் கூறுவர்.
ஊர்க்குருவி. இதனைச் சங்க இலக்கியங்கள் மனையுறைக் குரீஇ என்றும்,உள்ளுறைக் குரீஇ என்றும் உள்ளூர்க் குரீஇ என்றும் குறிப்பிடுகின்றன. இவை மக்களோடு பழகி வாழ்பவை.தூக்கணங்குருவி.
இதன் மற்றொரு வகை தூக்கணங்குருவி. இது மூங்கில் மரங்களிலும், தென்னை மரங்களிலும்,கூடு கட்டிக்கொண்டு வாழ்பவை. மக்களோடு பழகாமல் காட்டுப்பகுதியில் வாழ்பவை. தினைப்புனம் காத்த மகளிர் இவற்றைத்தான் ஓட்டியதாகப் பாடல்கள் கூறுகின்றன.பழக்கப்பட்ட குருவிகள்பழக்கப்பட்ட குருவிகள் பறம்புமலையை மூவேந்தர்கள் முற்றுகை இட்டிருந்தபோது நெற்கதிர்களைக் கொண்டுவந்து பாரி வள்ளலின் குடும்பத்தின் பசியைப் போக்கியதாக ஒரு பாடல் தெரிவிக்கிறது.இந்தக் குருவியின் நிறம் பற்றிய குறிப்புகளும் உள்ளன,குருவியின் நிறம் பூளாப் பூ போன்ற வெண்மை.ஆண்குருவியின் கழுத்து கருநிறம்.தூக்கணங்குருவியின் கூடு வளைந்த வாயில்களை உடையது என்றும், உயர்ந்த மரங்களில் தொங்கும் என்றும் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.பொதுக்குறிப்புதமிழ் இலக்கியங்களில் சிட்டுக் குருவியைப் பற்றி பல செய்திகள் காணக்கிடக்கின்றன. சிலப்பதிகாரத்தில் 'குருவி ஒப்பியும் கிளி கடிந்து குன்றத்து' என்று குன்றக் குரவையில் மலை மேல் திரிந்த குருவியையும் கிளியையும் இளங்கோவடிகள் பாடியுள்ளார்.புறாநானூற்றில் உள்ள குரீஇ என்ற சொல்லே மருவி குருவி என்றானது என்பர். "குன்றத்து இருந்த குரீஇ இனம் போல் " என்ற புறநானூற்றுப் பாடலிலும் "மனையுறை குரீஇக் களை கனல் சேவல்" என்ற பாடலிலும் கழுத்தில் கறுப்பினை உடைய ஆண்குருவி, வீட்டிலேயே செல்லப் பறவையாக வாழ்வதைக் கூறுகிறது. "தூக்கலாம் குரீஇத் தூங்கு கூடு" என்ற புற நானூற்றுப் பாடலிலும் தூக்கணாங்குருவியையும் அதன் கூட்டையும் சுட்டுகிறது." எண்ணரும் குன்றில் குரீஇ இனம் போன்றனவே"என்ற களவழி நாற்பதும் யானைமேல் தைத்த அம்புகளுக்கு, மலை மீது தங்கிய குருவிகள் உவமை ஆக்கப்பட்டுள்ளன. "உள்ளிறைக் குரீஇக் காரணற் சேவல்"என்ற நற்றிணைப் பாடலும் நெல்லின் அரிசி ஆர்ந்து தன் புறப்பெடையோடு வதியும் குருவியைக் காட்டுகிறது. " ஆம்பல் பூவின் சம்பல் அன்ன கூம்பிய சிறகர் மனை உரைகுரீஇ " என்ற குறுந்தொகைப் பாடலில், ஆம்பல் மலரின் நாம்பல் நிறத்தை ஒத்த குவிந்த சிறகுகளை உடைய வீட்டுக் குருவிகள் முற்றத்தில் உலரும் தானியங்களைத் தின்று, பொது இடத்தின் கண் உள்ள எருவினது நுண்ணிய பொடியைக் குடைந்து விளையாடி, வீட்டில் இறப்பில் தம்முடைய குஞ்சுகளோடு தங்கியிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது."குருவிசேர் வரை போன்ற குஞ்சரம்"என்ற சீவக சிந்தாமணி யானை மேல் பல அம்புகள் உள்ளதை மலை மேல் குருவிகள் உள்ளதற்கு உவமையாகக் கூறுகிறது."குருவி சேர் குன்றம் ஒத்து"என மேருமந்திர புராணமும் இந்தக் குருவி உவமையைக் காட்டப்படுகிறது ..இப்போது இப்படிப்பட்ட குருவிகள் 1990 க்குப் பின்பாகக் காண்பது அரிதாகவே இருக்கும் காரணம் தொலைபேசி வானுபர் கோபுரத்தின் அலைவரிசை தான் இயற்கை செயற்கையால் அழிவு சில சிட்டுக்குருவி சித்த மருத்துவத்திலும் இலேகிய மருந்தாகவும் பயன்படும் நிலை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்