இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவு ,கொரானா வைரஸ் பரவல் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தைகள் வணிகநேரத் தொடக்கத்திலேயே கடும் சரிவைச் சந்தித்துள்ளன. தொழில், வணிகத் துறைகளில் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி ஆகியன பாதிக்கப்பட்டுள்ளன. இதன் தாக்கம் கடந்த 3வாரங் களாகப் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் இரண்டாயிரத்து 29புள்ளிகள் சரிந்து 32,074 ஆக இருந்தது.தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 596 புள்ளிகள் சரிந்து ஒன்பதாயிரத்து 359 ஆக இருந்தது. உலோகத் தொழில் நிறுவனங்கள், வங்கிகளின் பங்குகள் பத்து விழுக்காடு வரை வீழ்ச்சி யடைந்தன.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்