கட்சிப் பதவிக்கு தானே வெட்டுக் காயம் செய்த ஜந்து -பகவான் நந்து
`என்னை அரிவாளால் வெட்டிட்டு ஓடிடுங்க!’ என பதவிக்காக தனக்கே ஸ்கெட்ச் போட்டு
திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் பகுதி பகவான் நந்து. இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டத் துணைச் செயலாளர் நேற்றிரவு ஒன்பது மணிக்கு இவர் நடந்திவந்த எலெக்ட்ரானிக்ஸ் கடையை மூடிவிட்டு வீடு கிளம்புகையில், மர்மநபர்கள் சிலர் அரிவாளால் வெட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதில் உடலில் 8 இடங்களில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்தவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.
`இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சிலருடன் ஏற்கெனவே பகவான் நந்துவுக்கு முட்டல் மோதல் இருந்திருக்கிறது. அவர்கள்தான் இந்தக் கொலைவெறித் தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியிருக்கக் கூடும்’ என இந்து மக்கள் கட்சியினர் கொதித்துக் கிளம்பினர். இதனால் பெருமாநல்லூர் பகுதியில் இரு மதத்தினரிடையே பிரச்னை வெடிக்கும் சூழல் எற்பட்டது. குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிரமாகக் களத்தில் இறங்கியதும் விசாரணையில் கிடைத்த தகவல்கள் அதிரவைக்க
பகவான் நந்து வெட்டப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை எடுத்து முதலில் பெருமாநல்லூர் காவல்துறை ஆய்வுகள் செய்ய. அக் காட்சிகளில் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான பகவான் நந்துவின் டிரைவர் ருத்ரமூர்த்தி இருந்திருக்கிறார். ஏதோ முன்பகைக்காக ருத்ரமூர்த்திதான் இந்தச் சம்பவத்தைச் செய்திருக்கிறார் என போலீஸார் அவரைச் சுற்றி வளைத்திருக்கின்றனர். ஆனால் ருத்ரமூர்த்தியோ, `என்னை வெட்டுங்கடான்னு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததே பகவான் நந்து தான்’ எனக்கூறி காவல்துறையை மலைக்க வைத்திருக்கிறார். பைக்கை நிறுத்திய இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது கொடூர தாக்குதல்
தன்னையே வெட்டிவீச எவனாவது ஆள் செட் பண்ணுவானா? என காவல்துறை குழம்பிப் போயிருக்கின்றனர். ஆனால் ருத்ரமூர்த்தியோ தெளிவாக, `கட்சியில் நல்ல பதவி கிடைக்கணும். ஊர்ல நமக்குன்னு மாஸ் வரணும் என அண்ணன்தான் அவரையே வெட்டச் சொன்னார். முதுகில் லேசா வெட்டிட்டு ஓடிடுங்கடா, மத்ததை நான் பாத்துக்குறேன்னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே அவரை லேசா வெட்டிட்டு அவர் கையிலயே அரிவாளை கொடுத்துட்டு ஓடிட்டோம். அதைவச்சி அவரே உடம்பில் சில வெட்டுக்களைப் போட்டுக்கிட்டாரு. அவர் சொன்னதால்தான் ஆள் செட் பண்ணி சின்னதா ஒரு சம்பவம் செஞ்சோம். வேற மதத்தைச் சேர்ந்தவங்க மேல பழியைப் போட்டு பிரச்னையை திசை திருப்பிடலாம்னு சொன்னார். கடைசியில இப்படி ஆகிடுச்சி’ என கூறியிருக்கிறார்.
இதையடுத்து கொலைமுயற்சி என்றிருந்த வழக்கை மாற்றி, ருத்ரமூர்த்தியோடு சேர்ந்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாரென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், `சுய விளம்பரத்துக்காக மற்றும் லாபத்துக்காக பொதுமக்கள் மற்றும் இதர மதத்தினரிடையே கலகம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என அறிக்கை கொடுத்திருக்கிறார்.
அரசியல் பதவிக்காக தன்னை வெட்ட தானே ஆள்செட் செய்த, இந்து மக்கள் கட்சிப் பிரமுகரின் செயல் திருப்பூரில் பலரும் அதிர்ச்சி யடையச் செய்திருக்கிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்