செய்தியாளர் கீரவாணி இளையராஜா: கொன்னையூர் அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயிலில் அக்னிகாவடித் திருவிழா அல்லது பங்குனித் திருவிழா பூத்திரு விழாவுடன், அக்னிகுண்டம் இறங்குதல் நடைபெற்றது. இதற்காக கோயில் முன்பு 14 குண்டங்கள் அமைக்கப்பட்டிருந் தன. ஆலவயல், கண்டியாநத்தம் தூத்தூர், மூலங்குடி, தேரடிமலம் பட்டி, கொத்தமங்கலம், தச்சம்பட்டி, ரெட்டியப்பட்டி, நல்லூர், வீரணாம்பட்டி, கொன்னைப்பட்டி, பனையப்பட்டி, குழிபிறைப்பட்டி, சுந்தரசோழபுரம், குழிபிறை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடியுடனும், அலகுகுத்திக் குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மேற்கொண்டனர். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் உள்பட. விழா நிர்வாகிகள் செய்திருந்தனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்