ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றமும் இறக்கமும் இன்று சவரனுக்கு 632 ரூபாய் குறைந்துள்ளது. மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாகத் தங்கம் விலை குறைக்கப்பட்டு வருவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை 4,000 ரூபாய் வரம்பிலிருந்து குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (மார்ச் 14) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,934 ஆக உள்ளது. நேற்று 4,013 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 79 ரூபாய் குறைந்துள்ளது.
அதேபோல, நேற்று 32,104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 31,472 ரூபாயாகக் குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை ரூ.4,135 ஆக உள்ளது. நேற்று 4,214 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல, 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 33,712 ரூபாயிலிருந்து இன்று 33,080 ரூபாயாகக் குறைந்துள்ளது. தூய தங்கத்தின் விலையும் 632 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,247 ஆகவும், டெல்லியில் ரூ.4,225 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,250 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,022 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,018 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,023 ஆகவும், ஒசூரில் ரூ.4,026 ஆகவும், கேரளாவில் ரூ.3,982 ஆகவும் இருக்கிறது.
தங்கத்தைப் போலவே இன்று வெள்ளி விலையும் மிகப் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி 46 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று ரூ.44 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.44,000 ஆக இருக்கிறது.இந்த விலை நிச்சயமற்ற நிலை நிலவி வருவது மக்கள் குழப்பத்தில் குறைவு கூட நிறைவாக இல்லாத நிலை நாளை மாற்றம் அதிகமாகுமா குறையுமா என்ற நிச்சயமற்றநிலை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்