முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தி மு க பொதுச் செயலாளர் க.அன்பழகன் காலமானார்

            திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், உடல்நலக் குறைவு காரணமாக 98 வயதில்  இன்று  காலமானார்.
திமுகவின் மூத்த தலைவராகவும், நீண்டகாலமாக கட்சியின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் பச்சையப்பன் கல்லூரி துணைப்  பேராசிரியராகப் பணியாற்றி பின் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரானவர் ராமையா ஏன்ற இயறபெயர் கொண்ட  க.அன்பழகன்.தற்போது  சளி, மூச்சுத் திணறல் காரணமாக பிப்ரவரி  24 ஆம் தேதி இரவு, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  அனுமதித்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,  மருத்துவமனையிலேயே இன்று உயிர் பிரிந்தது. இதை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று அதிகாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கலைஞரும், பேராசிரியரும் - திராவிட அரசியலில் ஒரு நீண்ட நட்பின் வரலாறாகும் 
அன்பழகனின் உடல் பொதுமக்கள், கட்சித் தொண்டர்களின் அஞ்சலிக்காக, சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது 'பேராசிரியர் அன்பழகனின் மறைவையொட்டி, கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று முதல் ஒரு வாரம் காலம் ஒத்திவைக்கப்படுகிறது. கழக கொடிகள் ஏழு நாட்களுக்கு அரைகம்பத்தில் பறக்கவிடப்படும்' என்று திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததையடுத்து, மார்ச் 1 ஆம் தேதி தமது பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
கட்சி, ஆட்சியில் திமுகவின் ஆளுமை க.அன்பழகன்
தமிழ்நாடு சட்டப்பேரவை மேலவை உறுப்பினராக 1962 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அன்பழகன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 1967 முதல் 1971 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக ஒன்பது முறை பதவி வகித்த அன்பழகன், 1977 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை திமுகவின் பொதுச் செயலாளராக பதவி வகித்தவர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உற்ற தோழராக திகழ்ந்த அன்பழகனின் மறைவு திமுகவின்  தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.திருவாரூர் அருகிலுள்ள காட்டூரில் 1922 ல்  மணவழகர் என்கிற கல்யாணசுந்தரம் முதலியாருக்கும் சொர்ணத்தம்மக்கும்.  ஐந்து வாரிசுகளில் மூத்தவர் அன்பழகன்  (ராமைய்யா) கல்யாணசுந்தரம் பெரியாரின் தீவிரப் பற்றாளர். காங்கிரஸ் சார்பாக பெரியார் கதர் இயக்கத்தைப் பரப்பியபோது, மயிலாடுதுறையில் கதர் விற்பனைக்கென்றே தனி கடை நடத்தியவர்.
1925-ல் பெரியார் காங்கிரஸை விட்டு விலகியபோது, கல்யாணசுந்தரமும் விலகினார். பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோன்றுவித்த போது, கல்யாணசுந்தரமும் அதில் தொண்டரானார். 
பிள்ளைகளின் படிப்பை முன்னிட்டு 1939-ல் மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரத்துக்குக் குடிபெயர்ந்தார் கல்யாண சுந்தரம். தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்னும் நீதிக் கட்சியின் தலைமைப் பொறுப்பை பெரியார் ஏற்றபோது, கல்யாண சுந்தரமும் நீதிக்கட்சி அமைப்பை சிதம்பரத்தில் தொடங்கினார். அதில் சேர்ந்த 20 உறுப்பினர்களில் ராமைய்யாவும் ஒருவர். 
நீதிக்கட்சி சார்பில் சிதம்பரத்தில் கல்யாணசுந்தரம் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் பெரியார், அண்ணா, சி.பி. சிற்றரசு, பொன்னம்பலனார் போன்ற முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வர். கூட்டம் முடிந்தபிறகு, கல்யாண சுந்தரம் வீட்டில்தான் இரவு ஓய்வு. அந்தத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ராமைய்யாவுக்குக் கிடைத்தது. இது தவிர, ராமைய்யாவின் தந்தை, இயக்க இதழ்களின் முகவராக இருந்ததால், அந்த இதழ்களைப் படித்து... தனது அறிவாற்றல் வளர்ந்தவர்.
1939-ல் இன்டர்மீடியெட்டில் அண்ணாமலைப் பல்கலையில் சேர்ந்தார் ராமைய்யா. மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்க ஈடுபாட்டால் தன் பெயரை அன்பழகன் என்று மாற்றிக் கொண்டார். இவரது தந்தையும் தன் பெயரை மணவழகன் என்று மாற்றிக் கொண்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவரது தமிழுணர்வுக்கு வித்திட்டது 
சிதம்பரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் அதிகம். சுயமரியாதை இயக்கம் அப்போதுதான் வேர்பிடிக்க ஆரம்பித்திருந்த காலம். அந்தக் காலக் கட்டத்தில் பாடவேளை, உறங்கும் நேரம் தவிர, பல்கலையின் ஏதேனும் ஒரு மூலையில் அன்பழகனின் குரல் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கும். சுற்றிலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தோழர்கள்... நடுவில் அன்பழகன்.
சுற்றிப் பகைவர் கோடி சூழினும் சூறைக் காற்றாய்ச் சுழலும் அவரது சொற்போர் பலரை சுயமரியாதை இயக்கத்தவர்களாய் மாற்றியது. பல்கலையில் சுயமரியாதை இயக்கம் வேர்பிடித்து, விழுது விட்டு வளரத் தொடங்கியது. அதன் பிறகு தான் அங்கே திராவிட மாணவர் கழகம் உருவாகும் நிலை ஏற்பட்டது. படிப்படியாக அன்பழகன் திராவிட இயக்கத்தின் நட்சத்திரப் பேச்சாளராக உருவானார்.
பல்கலைக் கழகத்தில் ‘தமிழ் இலக்கிய மன்றம்’ சார்பாக அறிஞர் அண்ணாவை சிறப்புப் பேச்சாளராக அன்பழகன் அழைத்தபோது, பலத்த எதிர்ப்பு. அண்ணா வந்தார். ‘ஆற்றோரம்’ என்ற தலைப்பில் அருவித் தமிழில் அவர் பேசியபோது, எதிர்த்தவர்கள் தலை குனிந்தார்கள்.
இந்தக் கால கட்டத்தில்தான் திருவாரூரில் தமிழ் மாணவர் மன்றம் வைத்திருந்த இளைஞர் ஒருவர் அன்பழகனை திருவாரூருக்குப் பேச அழைத்தார். அன்பழகனும் நெடுஞ்செழியனும் அங்கு சென்று பேசினர். கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த அந்த இளைஞரின் பெயர் மு.கருணாநிதி.
1944ஆம் ஆண்டு நீதிக்கட்சி திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்று அசுர வளர்ச்சி கண்டது. அன்பழகன் முன்னணிப் பேச்சாளராகத் தமிழகம் முழுக்க கொள்கை முழக்கம் செய்தார்.
இந்த ஆண்டில் அன்பழகன் எம்.ஏ. தேர்வு பெற்று பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார். பேராசிரியர் வகுப்பு நடத்துவதே தனியழகு. அது ஒரு திராவிடர் இயக்கக் கருத்தரங்கு மாதிரி இருக்கும். இவர் வகுப்பெடுக்கும்போது வேறு துறையைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புக்கு வெளியே நின்று இவரது தமிழ்ச் சாரல் பேச்சை ரசிப்பார்கள். பணியில் இருந்து கொண்டே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கட்சியின் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.
அன்பழகனின் வாழ்க்கைத் துணைவி ஜெயலக்ஷ்மி. 1945 ல் பெரியார் தலைமையில் திருமணம். தமிழுணர்வு காரணமாக ஜெயலக்ஷ்மி வெற்றிச்செல்வியானார். வாழ்க்கைத் துணையாக மட்டுமின்றி, இயக்கத்தின் போராட்டங்களிலும் கலந்துகொண்டார் வெற்றிச் செல்வி.
1949 ல் அண்ணாவால் தி.மு.கழகத்தை தொடங்கப்பட்டபோது, அன்பழகனும் அதில் பங்கு கொண்டு கட்சிப் பிரசாரக் கூட்டங்கள், மாநாடுகளில் பங்கேற்றார். 1957 ல் அண்ணாவின் விருப்பப்படி சட்டமன்றத் தேர்தலில்  எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆனார். என்றாலும் பேராசிரியர் என்ற அடைமொழியை பச்சையப்பன் கல்லூரி இவர் மீது பச்சை குத்திவிட்டது. 
அதன்பிறகு, தி.மு.கழக தொழிற்சங்கச் செயலாளர், மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மக்கள் நல்வாழ்வுத்துறை, கல்வித்துறை அமைச்சர் என்று பல பதவிகள் இவரைத் தேடி வந்தன. ஆனால், அந்தப் பதவிகளையெல்லாம் விட, பேராசிரியருக்கு மகிழ்ச்சியூட்டும் பதவி தி.மு. கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற பதவிதான். 
நேருவுக்கு கறுப்புக்கொடி, விலைவாசி உயர்வு கண்டனப் போராட்டம், இந்தி எதிர்ப்பு மறியல் போர், இந்திரா காந்திக்குக் கருப்புக் கொடி, அரசியல் சட்ட எரிப்புப் போர் என்று பல போராட்டங்களில் கலந்துகொண்டு மாதக் கணக்கில் இவர் சிறை வாழ்வு  வாழ்ந்திருக்கிறார்.  1983 ல் ஈழத் தமிழர் பிரச்னைக்காக எம்.எல்.ஏ. பதவியை கலைஞருடன் இணைந்து இவரும் ராஜினாமா செய்தார். சட்ட எரிப்புப் போராட்டத்தில் இவர் உட்பட பத்துப்பேரின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது.
இவர் ஆடம்பரத்தில் அக்கறையற்றவர். ஆங்கில மருந்துகளைவிட, சித்த மருந்துகளின் மீது ஆர்வம். தினமும் உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வார். யோகாசனத்திலும் ஈடுபாடு உண்டு. எவர் உரிமையிலும் தலையிட மாட்டார்; தன் உரிமையையும் விட்டுத்தரமாட்டார். துணைவி வெற்றிச்செல்வி காலமானதால் இரண்டாவது மனைவியாக சாந்தகுமாரியை திருமணம் செய்தார் . 
கட்சியில் கலைஞருக்கு பிரச்சார பீரங்கிகள் நிறைய உண்டு. ஆனால், கேடயம் ஒன்றே ஒன்றுதான். அது அன்பழகன். சில நேரங்களில் பீரங்கிகள் கலைஞர் மீதே திரும்பிச் சுட்டன. அந்த நெருக்கடியான நேரங்களிலும் இந்தக் கேடயம் தனது நண்பரும் தலைவருமான கலைஞரைப் பாதுகாத்தே வந்திருக்கிறது.
சம்பத் போனார்; எம்.ஜி.ஆர். போனார். நெருக்கடி நிலையின்போது பலர் கையெழுத்துப் போட்டு கட்சியை விட்டு விலகினர். பேராசிரியர் எந்தச் சூழலிலும் விலகினாரில்லை. உயிர் நண்பரும் தலைவருமான கலைஞரிடமிருந்து இவரைப் பிரிக்க பல்வேறு முயற்சிகள் நடந்த போதிலும் அவையெல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. 
பேராசிரியர் பற்றி கலைஞர் கூறுவதைக் கேளுங்கள்.
‘இன்று நான் அறுபது லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இயக்கமாம் தி.மு.கழகத்தின் தலைவன். ஆறு கோடி மக்களுக்கான ஆட்சிக்கு முதல்வன் எனினும் கட்சியிலும் ஆட்சியிலும் எடுக்கும் முடிவுகள் எதுவாயினும் அவரது கருத்து என்னவென்று அறியாமல் செயல்பட்டதில்லை. இது, நான் அவரது வயதுக்கு அளிக்கும் மதிப்பு மட்டுமல்ல; அவரது அறிவுக்கு, ஆற்றலுக்கு, அனுபவத்திற்கு அண்ணாவிற்கு அடுத்து எனக்கு அண்ணனாக இருக்கிறார் என்பதற்காகவும்’ (1997)
கலைஞர் கூற்றில், பேராசிரியர் மீது என்ன ஒரு மரியாதை; அழுத்தமான நம்பிக்கை! அதனால்தான் இந்தமுறை அமைச்சரவையில் தன் பெயரிலான துறைக்கு (நிதி) தனது அண்ணணை அமைச்சராக்கி அழகு பார்க்கிறாரோ கலைஞர்.
அந்தக் காலத்தில் சென்னையில் அண்ணாவுக்கு வீடில்லை. காஞ்சியிலிருந்து சென்னை வரும்போதெல்லாம் அண்ணா, அன்பழகன் வீட்டில்தான் தங்குவார் உறவினர் . அந்த அளவுக்கு அண்ணாவின் மனம் கவர்ந்தவர் அன்பழகன்.
1967 ல் தி.மு.க. ஜெயித்தவுடன், அண்ணாவைத் தேடி கட்சிக்காரர்கள் அலைகிறார்கள். அண்ணா எங்கிருக்கிறார் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. அண்ணா இருந்த இடம் ஆஸ்பிரன் தோட்டத்திலிருந்த அன்பழகன் வீடு. அங்கு உட்கார்ந்து கொண்டு நிதானமாக அமைச்சர்கள் பட்டியல் தயாரித்துக் கொண்டிருந்தார் அண்ணா. பேராசிரியர் மீது அவர் வைத்திருந்த அழுத்தமான நம்பிக்கையின் அடையாளம் அது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...