தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அரசின் 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு சட்டம் மீறி கோவில்பட்டியில் ஊழியர்களை வைத்து செயல்பட்ட தனியார் பள்ளி நிர்வாகம் பள்ளியை மூடி சாவி எடுத்துச் சென்ற தாசில்தார்
கோவில்பட்டியில் உள்ள காமராஜ் இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளியில் பள்ளி நிர்வாகம் 25க்கும் மேற்பட்ட பணியாளர்களை வைத்து அடுத்த கல்வியாண்டுக்கான பாடபுத்தகங்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தாசில்தார் மணிகண்டன் பள்ளியில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பணியாளர்கள் வேலை செய்வது தெரியவந்ததைத் தொடர்ந்து பணியாளர்களை உடனடியாக வெளியேற்றி, பள்ளியை மூடி பள்ளிச் சாவியை தாசில்தார் மணிகண்டன் எடுத்து சென்றார் இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சட்டத்தை அரசை மதிக்காத இப் பள்ளி போல உள்ள நபர்கள் தான் நோய் பரப்பும் காரணிகளாகும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்