உலக மனித குலத்தின் மீதான தாக்குதல் இது..
பொதுவாக நிலநடுக்கம் சுனாமி, வெள்ளம், வறட்சி நிலச்சரிவு, போன்ற இயற்கை பேரிடர்கள் சில நாடுகளில் மட்டுமே நடக்கும் அவற்றின் பாதிப்பும் தாக்கமும் கணிசமாக தான் இருக்கும் அவற்றை அந்த நாடுகளும் அதற்கு உதவ முன்வரும் நாடுகளும் சமாளித்து விடும்.
ஆனால் கொரோனா விவகாரம் முற்றிலும் வித்தியாசமானது இந்த நோய்.. நாடுகளையும், கண்டங்கள் கடந்து எல்லையில்லாமல் மொத்த உலகையும் கதிகலங்க வைத்துள்ளது.நோய்க்கு எதிராக எந்த நாடும் கம்பீரம் காட்ட முடியவில்லை.. இன்னொரு பக்கம் பொருளாதார பாதிப்புகள். ஷேர் மார்க்கெட் களின் வீழ்ச்சியை மட்டுமே பெரிய அளவில் கவனிக் கிறார்கள்.. கவலைப்படுகிறார்கள் .மக்களின் நடமாட்டம் படிப்படி யாகக் குறைந்து வருவதால் பாதிக்கப்படும் பல்வேறு கூலித் தொழிலாளர்கள் நிலைமை கேட்கப் பரிதாபமாக இருக்கிறது..
இதை பதிவு செய்த நண்பர் ஒருவரும் நானும் ஏன் இதைப் படித்துக் கவலைப்படுகிற நீங்களும்கூட சொந்தமாய் வேதனைப்படும் நிலைமைக்கு தப்ப முடியுமா என்பது சந்தேகமே..
இயற்கையின தீர்ப்புக்கு முன்
எல்லாருமே கைகட்டி நிற்க நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, வேதா ரண்யம் அரசுமருத்துவமனை களில் கொரோனா தனி அறைகள் விவரப் பட்டியலில் பொறுப்பு அலுவலர்கள் நியமனம்.இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் தற்போது நாட்டில் 72 கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகங்கள் இயங்கி வருகின்றன, மேலும் 49 ஆய்வகங்கள் இந்த வார இறுதிக்குள் தொடங்கப்படும் என டாக்டர் பல்ராம் பார்கவா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் தெரிவித்துள்ளார். உடலில் நோய் வருவதற்கு முன்பு உள்ளத்தில் நோயை இறக்கிவிடுவார்கள் போலும்.காரணம்
பயம்,மனிதனை,மனிதன் தொடப் பயம்..பொது இடங்களில் ஒன்று கூடப் பயம்...அன்புக்குப் பயம்,அரவணைக்கப் பயம்,
துக்க வீடு சென்று ஆறுதல் சொல்லப் பயம், விமானங்களுக்கும் விடுமுறை விடலாம்.ஆனால்,பேருந்துகளுக்கோ,ஆட்டோக்களுக்கோ விட முடியாதல்லவா.
.ஐ.டி நிறுவனங்கள் அரண்டு போய் முடங்கலாம்.வயலில் விவசாயம் முடங்காது
கேளிக்கை விடுதிகள் முடங்கலாம்,
ஆடம்பர மால்கள் முடங்கலாம்!
மீன்சந்தையும்,சாவடியும் முடங்காது.சமூகச் செயல் பாடுகளை முடக்க முடியாது! ஷாகின்பாக்குகளை சலனப்படுத்த முடியாது
படித்தவன் முடங்கலாம்
பணக்காரன முடங்கலாம்!
பாமரன் முடங்கமாட்டான். முடங்கினால்,இந்த சமூகமே சாய்ந்துவிடும்.ஆம்! நாளும் சாக்கடை அள்ளுபவன்.குப்பை அள்ளும் தொழிலாளர்கள் முடங்க முடியாது!தொழிற்ச்சாலை துவண்டு பின்வாங்க முடியாது! கோடானுகோடி அன்றாடக் கூலிகள் அரண்டு பின்வாங்கி அயர்ந்து அமர்ந்துவிட்டால்
அங்கே சமூகமே சமாதி நிலைக்குத் தள்ளப்படும்.
எதையோ திசை திருப்ப என்னென்னவோநடக்கிறதோ. சீனர்கள் விதைத்த உயிராயுதம் வேலை செய்கிறது. இது பூமி உருண்டை என்பது மறந்து உடைத்துச் சாப்பிட பொரி உருண்டையாக்கி ஆயுதப் போட்டியில் வெற்றி காண முடியாமல் வேதியியல் ஆயுதம் செய்து வேளை துவங்கியவர்கள்.
மனிதமும், நேசமும் தான் மாண்புக்கே அடிப்படை!
நம்மை ஏய்த்து சாய்ப்பதற்கான சதிகளைஅடையாளம் காண்போம்!வதந்திகளைப் புறந்தள்ளுவோம்.வாழ்க்கைக் கான நம்பிக்கைகளை வளர்ப்போம்.அது நமக்கு பாதுகாப்பாகும் .
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்