மதுரை கொரானா முகாமிலிருந்து தப்பியவர் காதலி வீட்டில் பிடிபட்டார்.மதுரை கொரானா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பிய இளைஞரை அவரது காதலி வீட்டில் போலீசார் பிடித்துள்ளனர். துபாயில் இருந்து மும்பை வந்து விமானம் மூலம் கடந்த 21ஆம் தேதி மதுரை வந்த சிவகங்கை மாவட்டம் கீழபூங்குடியைச் சேர்ந்த இளைஞர் மதுரை சின்ன உடைப்பு கொரானா கண்காணிப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டி ருந்தார். முகாமில் சிகிச்சையில் இருந்த அவர் இன்று அதிகாலை தப்பி ஓடியதாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.முகாமில் இருந்து தப்போடிய அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டி லிருந்து வந்த அவரை பார்க்க காதலி ஆவலாக இருந்ததால், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அவரை காண சினிமா பாணியில் முகாமிலிருந்து தப்பியோடியது தெரியவந்தது. சிவகங்கையில் காதலி வீட்டில் இருந்தவரை சுற்றிவளைத்த தனிப்படையினர் கைது செய்து தற்பொழுது மதுரை கொண்டு வருகின்றனர். காதலி வீடு சிவகங்கை மாவட்டத்தில் வருவதால் அவரை கண்காணிக்க அந்த மாவட்ட சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்