புத்தகத் திருவிழா அல்லது கண்காட்சி, பொது மக்களிடையே புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் அதிகரிக்கவும், புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அமைப்பான தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஆண்டு தோறும் நூற்றுக்கும் அதிகமான அரங்குகள் கொண்ட புத்தகத் திருவிழாக் கண்காட்சி பத்து நாட்கள் நடத்துகிறது. புத்தகத் திருவிழாவில் விற்பனை செய்யப்படும் நூல்களுக்கு விற்பனை விலையில் குறைந்த பட்சம் பத்து விழுக்காடு தள்ளுபடியும் வழங்குகிறது.
1977ம் ஆண்டில் சென்னை மதரசா-இ-ஆசாம் பள்ளியில் துவங்கி நான்கு புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்ட பிறகு, 1981ஆம் ஆண்டு இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடத்தப்படுகிறது. சென்னை புத்தகக் காட்சி வெற்றியின் காரணத்தினால், உதகமண்டலம், பாண்டிச்சேரி, மதுரை, திருப்பூர், நெய்வேலி, நாகர்கோயில், காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளியிலும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தால் புத்தகக் காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் முடிவில் சிறந்த பதிப்பகம் மற்றும் தகுதியான நபர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது, 43 வது புத்தக விழாவில் சிறப்பான செட்டிநாட்டின் உணவு சேவைக்காக தமிழகத்தின் துணை முதல்வரிடம் விருது பெரும் காரைக்குடி அண்ணாமலை கேட்ரிங் உரிமையாளர் கண்டனூர் அரசி முத்துக்குமார்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்