இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இந்து மதத்தைச் சார்ந்தவர் என்று உறுதிமொழி எடுக்கவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு.
இந்து அறநிலையத் துறையில் பணியாற்றும் அனைத்தும் அதிகாரிகளும் ஊழியர்களும் தாங்கள் இந்து மதத்தைப் பின்பற்றுவதாக எட்டு வாரங்களில் புதிதாக உறுதிமொழி எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில், அத்துறையின் ஆணையர், பிற அதிகாரிகள் பணியில் சேரும் முன், அருகிலுள்ள கோவிலில் உள்ள முதன்மை தெய்வத்தின் முன், தான் இந்து மதத்தில் பிறந்தவர் என்றும், இந்து மதத்தை தொடர்ந்து பின்பற்றுபவர் என்றும் உறுதிமொழி எடுப்பதுடன், உறுதிமொழி படிவத்திலும் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டப் பிரிவுகளின்படி தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும், பிற அதிகாரிகளும் எந்த உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளதாக கூறி இந்த அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென என சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ் வழக்கு நீதியரசர்கள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்ததபோது, இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், இந்து அறநிலையத் துறைக்கு நியமிக்கப்பட்ட ஆணையர் மற்றும் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் என்பதால் உறுதிமொழி எடுக்கவில்லை எனவும், நீதிமன்றம் உத்தரவிட்டால் உறுதி மொழி எடுக்கும் விதி பின்பற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்து அறநிலையத்துறை விதிகளின் படி, கோவிலில் பணியாற்றும் ஆணையர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தாங்கள் இந்து சமயத்தைப் பின்பற்றி வாழ்வாதாக உறுதிமொழி எடுப்பது HR&CE சட்டத்தின் படி உள்ள நிலை அதை மறந்து பலர் இது இந்து சமய ஆலயம் போல இல்லாத பொது மதமாக மாற்றிய விளைவாக இன்று உயர்நீதிமன்றம் சரியான தீர்வு கண்டுள்ளது .
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்