முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலவமரத்துக் கிளிகளுக்கு ஏமாற்றம் வர இருபத்தைந்து வருடக் காத்திருப்பு காரணம்

         சிவாஜி ராவ் கைக்வாட் என்ற ரஜினிகாந்த், 1949 டிசம்பர்12  ஆம் நாள் கர்நாடகாவில்  பெங்களூரில் வசித்த  ராமோசி ராவ் காயக்வடுக்கும், ரமாபாயிக்கும் நான்காவது மகன் மராத்திக் குடும்பத்தில் பிறந்தவருக்கு இரண்டு சகோதரர்கள் ஒரு சகோதரி ஐந்து வயதில், தாயை இழந்து பெங்களூரில்  ஆச்சாரியா பாடசாலை மற்றும் விவேகானந்த பாலக சங்கத்தில் பள்ளிப்படிப்பை முடித்து பேருந்து  நடத்துனராக வாழ்வைத் தொடங்கி மேடை நாடகங்களிலும் நடித்து பின்  நடிகராகும் நோக்கத்தில் சென்னை வந்து  பல இன்னல்களைச் சந்தித்து ஒரு நண்பனின் உதவியால் சென்னை திரைப்படக் கல்லூரியில சேர்ந்தார். 1975 ல், கே. பாலச்சந்தரினஹ அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில், ஒரு சிறிய வேடத்தில் திரையுலகில், 1976ல் “கதா சங்கமா” கன்னட திரைப்படத்தில் நடித்தார்.  பாலச்சந்தரின் மூன்று முடிச்சு திரைப்படம்  நடிகனாக அடையாளம் காட்டியது.ஒரு பொதுவான கருத்தை ஏற்பது அல்லது நிரகரிப்பது,தனக்கென ஒரு கருத்தை,கொள்கையை உருவாக்குவது.. அதை அடுத்தவரிடம் திணிப்பது,அதிகார மைய்யத்தைப் பெற முயற்சிப்பது,அல்லது அபகரிக்க நினைப்பது.தன்னுடை சொல்லையும்,செயலையும்,எதிர்ப்பையும் தன் செய்யும் தொழிலில் மூலமாக வெளிப்படுத்துவது. தன்னைக் காத்துக் கொள்ள ஆள்வோரின் துணையை நாடுவது. இது தானே அரசியல்..இதில்  எதையும் செய்யாமல் இருந்தார் இருக்கிறார் ரஜினி
சொல்லும்.. செயலுமே அரசியலே தவிர கொடியும் கட்சி பெயருமல்ல.. அரசியலில் நான் இல்லை.இனி இறங்கப்போகிறேன் என்று கூறுவதுதான் உலகில் பெரிய பித்தலாட்டம்,அதுதான் மிகப்பெரிய அரசியல்
சரி சொல்லு மண்டபத்து மீட்டிங்ல.. என்ன பேசுனீங்க.?
உள்ளே பேசினதை வெளியே சொல்லீடாதீகன்னு சொன்னாங்க சார்.
பரவாயில்லை நீ சொல்லு உள்ளே என்ன பேசுனீங்க?
உள்ளே பேசுனதை வெளியே சொல்லகூடாதுன்னு பேசுனாங்க சார்.
அட பரவாயில்லை அதை நீ சொல்லு.
அடிச்சுக்கூட கேப்பாங்க..ஆனா..உள்ளே பேசுனதை வெளியே சொல்லகூடாதுன்னு பேசுனாங்க சார்.
சரி நாங்க உங்கள அடிக்கல..நீங்க அங்க நடந்துன்னு மட்டும் சொல்லுங்க..
உதச்சுக்கூட கேப்பாங்க..ஆனா..உள்ளே பேசுனதை வெளியே சொல்லகூடாதுன்னு பேசுனாங்க சார்
அட பரவாயில்லை அதை நீ சொல்லு.
அன்பா கூட கேப்பாங்க..ஆனா உள்ளே பேசுனதை வெளியே சொல்லகூடாதுன்னு பேசுனாங்க சார்.
அட பரவாயில்லை அதை நீ சொல்லு.
அன்பா..பண்பா கூட கேப்பாங்க..ஆனா உள்ளே பேசுனதை வெளியே சொல்லகூடாதுன்னு பேசுனாங்க சார்.
அடேய்..அடேய்.. அடேய்...             நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவர் ஜொலிக்க மாட்டார் என்று அடித்து கூறியுள்ளார் எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன்.
களைகட்டுகிறதா ரஜினியின் அரசியல் பிரவேசம். மாவட்டச் செயலாளர்களை சந்திப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி
ரஜினிகாந்த் தனது கட்சிப்பெயரை இந்த ஆண்டு அறிவித்து விடுவார் என்று சொல்கின்றனர். அவராக அறிவிக்கும் வரை அது நிச்சயமில்லை. ஏழரை சனியில் ஜென்ம சனி நடக்கும்  நேரத்தில் 69 வயது ரஜினிகாந்த் சினிமாவில் ஜெயித்தது போல அரசியலில் சாதிப்பாரா? சறுக்குவாரா?
 அரசியலுக்கு வரவேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. ஆனால் ஆன்மீக அரசியல் என்று சொன்ன ரஜினி போர் வரட்டும் என்று கூறியிருந்தார், அவர் சொன்ன பிறகு நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சித்தேர்தல் எனப் பல போர்கள் நடந்து  விட்டன.  ரஜினிகாந்த் மட்டும் எந்தத் தகவலையும் வெளியிடவே இல்லை
ரஜினிகாந்த் 1996 ல்  நடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக - தமாக கூட்டணிக்கு வாய்ஸ் மட்டுமே  கொடுத்தார். அப்போதிருந்துஅவரை அரசியலுக்கு அழைத்துக்கொண்டிருக்கின்றனர் அவரது ரசிகர்கள். ஆனால் கருணாநிதி, ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் 2017ஆம் ஆண்டில்தான் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்தார் ஆனாலும் ரஜினிகாந்த் முழுவீச்சில் அரசியலில் இறங்கவில்லை. சைலண்ட் ஆக இருந்த கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கி தமிழக அரசியலில் பெரிய வெற்றி இல்லா விட்டாலும் வந்து  விட்டார்.
அரசியலுக்கு வருவாரா ரஜினி


அரசியலில் ஜெயிக்க மக்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் அவசியம். ரஜினிகாந்த் சினிமாவில் நடித்து பிரபலமானவர்தான். ஆனால் அவர் என்றைக்கு அரசியல் பேச ஆரம்பித்தாரோ அன்றிலிருந்தே அவர் பேசுவது அனைத்தையும் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.
ரஜினிகாந்த் மகர ராசி, திருவோணம் நட்சத்திரம் இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் ஏழரைச் சனியில் ஜென்ம சனி தொடங்கியுள்ளது. ரஜினி எப்போது கட்சி தொடங்கினாலும் அவர் தமிழக முதல்வராக வலம் வரக்கூடிய யோகம் அவருக்கு இருக்கிறது என்று கேரளா ஜோதிடர்கள் கூறியுள்ளார்களாம் 
ரஜினிகாந்துக்கு கடந்த 19 வருடங்களாக சனி திசை நடந்தது. அவருக்கு உடல்நல பாதிப்பு இருந்தது. 2018 ஜனவரி 21 தேதியுடன், ரஜினிகாந்த்துக்கு சனி திசை முடிவடைந்து புதன் திசை தொடங்கியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்பதைத்தான் அவரின் ஜாதகம் சொல்கிறது. தனிக்கட்சி தொடங்கத்தான் வாய்ப்பு அதிகம். 69 வயது 6 மாதங்களுக்குள் ரஜினியின் அரசியல் பிரவேசம் இருக்கும். அப்படி அவர் அரசியலுக்கு வந்தாலும், எல்லாமே வெற்றிதான் என்று மற்றொரு ஜோதிடர் கூறியுள்ளார் ஜோதிடர்.
அதே நேரத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன், ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்றும் அப்படி வந்தாலும் ஜொலிக்க முடியாது என்று கூறியுள்ளார். ஜெயலலிதா கருணாநிதி இல்லாத தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பலரும் கருதினாலும் அதிமுக,திமுகவை அசைக்க புதிய கட்சிகள் எதுவும் வரவில்லை. 2021 அதிசயம் நிகழும் என்று கூறிய ரஜினி தனது நிலைப்பாட்டை இன்னமும் உறுதியாக வெளிப்படுத்தவில்லை. பிறந்த தேதி 12- 12-1950 கூட்டுத்தொகை 3. இது குருவின் எண். தெய்வபக்தி, தேச பக்தி, உழைப்பாளி. பிறரின் கஷ்டங்களை வாங்கிக்கொள்வார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் என்ற பெயரின் கூட்டுத்தொகை 28 மொத்தம் 1 வருகிறது. உடல் ரீதியாக மனரீதியாக பல போராட்டங்களை பெற்றிருக்கிறார். ஆன்மீகத்தில் ஈடுபட்டிருந்த பலரும் 3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள்தான். சுவாமி விவேகானந்தர், ரமணமகரிஷி, முத்துராமலிங்கத்தேவர், சுத்தானந்த பாரதி, ஆப்ரஹாம் லிங்கன், டார்வின் ஆகியோர் 3ஆம் எண்ணின் கூட்டுத்தொகையில் பிறந்தவர்தான்.
அரசியலை விட ஆன்மீகம்தான் சிறந்தது. 69 வயதில் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை. காரணம் 3 ஆம் எண் குரு 69 கூட்டுத்தொகை 6 அது சுக்கிரனின் எண். ரஜினிகாந்த் இந்த வயதில் அரசியலுக்கு வந்தாலும் அவர் வெற்றி பெற வாய்ப்பு இல்லை அதே போல கமல்ஹாசனுடன் இணைந்து செயலாற்ற வாய்ப்பே இல்லை என்றும் கூறியுள்ளனர். கமலும் ரஜினியும் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார.
எண் கணித நிபுணர் டாக்டர் ஜெஎன்எஸ் செல்வம், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என்று கூறினார். அதே போல இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் கோத்தபய ராஜபக்சே ஆட்சியை பிடிப்பார் என்றும் கணித்திருந்தார். இந்த இரண்டு கணிப்புகளுமே பலித்துள்ளது. அதே போல ரஜினிகாந்த் பற்றிய கணிப்பும் பலிக்குமா என்று பார்க்கலாம்.மொத்தம் இலவம் பஞ்சு மரத்தில் இருபத்தைந்து ஆண்டுகளாகப் பழம் பழுக்கும்  எனக் காத்திருக்கும் ரசிகர்கள் நிலை தான் ஏமாற்றம் என்பது இது மக்கள் நிலை என்பது அவரை ஒரு பொருட்டாகவே யாரும் எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது அது ரஜினிக்கும் அவருக்கு பின்புலமுள்ளவர்களுக்கும் நன்கு தெரியும். அரசியல் வாதிகளாவது அவ்வளவு ஏளிது அல்ல என்பது வந்து அனுபவம் பெற்ற சிவாஜி ரசிகர்கள் அறிவார்கள் அதை ரஜினிரசிகர்கள் உணர்வார்களா அல்லது உணராமலேயே தங்களுடைய தலைவருக்கு கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு என கற்பனை உலகத்தில் வாழ்வார்களா என்பது  தெரியும் ஆனால் ஒன்று மட்டுமே நன்றாக நமக்குப் புரிகிறது யாரோ ஒரு வழிகாட்டும் நபர் மீது அவருக்கு நம்பிக்கை போய்விட்டது போல் தற்போது தக்க ஆலோசகர்கள் இல்லை என்பதே நிதர்சன உண்மை.அதை அவர் ரசிகர்களின் மாவட்டச் செயலாளர்களுக்குப் புரியவைத்து விட்டார் ..அதை வெளியில் வராமல் இருக்க வேண்டும் என அறிவுரை செய்திருப்பார் என்பதே  அரசியல் பார்வையாளர்கள் கருத்து.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...