சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும்..
5000 கி மீ தூரமிருக்கும்..
ஜனவரி மாதமே தன்நாட்டு எல்லைகளை மூடியும்.விமானப் போக்குவரத்துகளைத் தடை செய்தும்.கொரானா பாதிப்பிலிருந்து ரஷ்யா தப்பியிருக்கிறதென்றால் பல நாடுகளுக்கும் சந்தேகம் வரத்தான் செய்கிறது சீனா மீது.
ஏன் அவர்களின் நெருங்கிய கூட்டாளியாக உருவெடுத்துள்ள இலங்கை கூட தற்போது பெரிய பாதிப்புக்கு உள்ளாகவில்லையே எனற வினா எழாமல் இருக்க முடியாது.உலகமே ‘லாக் டவுனில்’. ஆனால் ‘மார்ச் 25’ முதல் ‘சீனா’ வெளியிட்டுள்ள ‘அதிரடி’ அறிவிப்பில் சீனாவில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் மார்ச் 25 முதல் நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாணத்திலுள்ள வுஹான் நகரில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதையடுத்து வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், அந்த நகரத்திற்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு பொதுமக்களும் தனிமைப் படுத்தப்பட்டனர். அதன்பிறகு அங்கிருந்து பல்வேறு உலக நாடுகளுக்கும் கொரானா பரவியது. தற்போது உலகம் முழுவதும் கொரோனாவால் 14,652 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3,34,981 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பெரும்பாலான நாடுகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே சீனாவில் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளால் கடந்த 19ஆம் தேதியில் இருந்து அங்கு புதிய உள்நாட்டுத் தொற்று எதுவும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் செவ்வாய் கிழமை நள்ளிரவிலிருந்து தளர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் வுஹான் நகரத்தில் மட்டும் ஏப்ரல் 8 வரை பயணக் கட்டுப்பாடுகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதியில் இருந்து இரண்டு மாதங்களாக அங்கு இந்தக் கட்டுப்பாடுகள் உள்ளன. கொரானாவால் பாதிப்பு பலநாடுகள் அனுபவிக்க விட்டு சீனா தங்கள் நாட்டு மக்களை காப்பாற்றியது தான் தற்போது நிலை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்