மயிலாடுதுறை மாவட்டம் பரிசீலிக்கப்படுமென முதலமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. தாமதமின்றி உருவாக்கப்படுவதே முழு மகிழ்ச்சி தரும் என மாயூரயுத்தம் இயக்கத் தலைவர் கோமல் அன்பரசன் அறிக்கை.மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்’ என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுடைய கால்நூற்றாண்டு கால தொடர் போராட்டத்திற்கு தமிழக அரசு செவிசாய்த்திருப்பது நிம்மதி அளிக்கிறது.அதே நேரத்தில், மயிலாடுதுறை மாவட்டம் அமைக்கப்படும் என்ற அரசின் உறுதியான அறிவிப்பு மட்டுமே அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக வஞ்சிக்கப்பட்டு கிடக்கும் மயிலாடுதுறை கோட்டப்பகுதி மக்களுக்கு தீர்வு தரும் மருந்தாக இருக்கும்.எனவே, பரிசீலிக்கிறோம் என்ற செய்தியைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மயிலாடுதுறை மாவட்டம் அமைக்கப்படும் என்று அறிவிக்கும் நாளில் தான் எங்களுடைய கோரிக்கை முழுமையடையும். இதனால் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிற மகிழ்ச்சியும் முழுமையானதாக மாறும்.
மயிலாடுதுறைக் கோட்டத்தில் இருக்கிற மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்களுக்குட்பட்ட மக்களும் மகிழ்ச்சியடைவார்கள். அந்த நாளை விரைவில் எதிர்பார்க்கிறோம்.இந்த நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டம் அமைய வேண்டும் என்பதற்காக மாயூரயுத்தம் இயக்கத்தோடு இணைந்து களத்தில் நின்று போராடிய வணிகர் சங்கங்கள், சேவை அமைப்புகள், அரசியல் கட்சியினர், அரசு அலுவலர்கள், விவசாய அமைப்பினர், நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தினர், வழக்கறிஞர்கள், மூத்த குடிமக்கள் அவையினர், ஓய்வு பெற்றோர் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தை அமைத்தே தீருவோம் என்பதில் உறுதியாக நின்று போராடிய என் பேரன்பிற்குரிய காவிரி அமைப்பின் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும், பல்வேறு துறைசார்ந்த நண்பர்களுக்கும் மாயூரயுத்தம் இயக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்