குடிப்பதற்கு வருபவர் கோட்டைத்தாண்டக்கூடாது. சென்னையில் ஒரு நகைச்சுவை
கேரளா மற்றும் ஈரோட்டில் மதுக்கடைகளில் முண்டியடிக்கும் குடிமகன்களால் கொரோனா பரவலை தடுக்க கோடு போட்டு மது வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது.இந்தக்கோட்டைத் தாண்டி நானும் வரமாட்டேன், கொரோனா நீயும் வரக்கூடாது . என்று டீல் போட்டு குடிமகன்கள், பால்வாடி பாப்பாக்கள் போல. வரிசை கட்டி நிற்கின்றனர்.
அதே நேரத்தில் சென்னையில் குடிப்பதற்கு மனமிருந்தால் கொரோனாவை மறந்து விடலாம் என்று முண்டியடிக்கும் அலட்சிய மான நிலைதான் உள்ளது.
இன்னும் சில மதுக்கடைகளில் பார்கள் மூடப்பட்டுள்ளது குடிமகன்கள். ஞாயிற்றுக் கிழமை அனைத்து மதுக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் திருவல்லிக்கேணி பகுதி மதுக்கடைகளில் மதுவாங்க இப்போதே கூட்டம் முண்டியடிக்க தொடங்கி விட்டது. குடிமகன் களால் நோய்பரவலை தடுக்க தற்போதே வேப்பிலை மாவிலை தோரணம் கட்டி தொடங்கிவிட்டார் ஒரு பழரசக்கடை பெண்மணி..
அரசின் நிதிக்கு ஆதாரமாக இருக்கும் இத்தகைய குடிமகன்கள் குறியால் சாவது கேட்டாலும் ஆனால் யாரும் கொரானாவால வாழக்கூடாது என சபதம் செய்து கோடு தாண்டாமல் தான் கொரோனாவுக்கு கொள்கை பரப்பு செயலாளர்கள் போல ஊர் முழுவதும் பரப்பிவிடும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், விபரீதம் கருதி சென்னையிலும் கோடு போட்டு குடிமகன்களுக்கு குட் டச், பேட் டச்சோடு, இனி டோண்ட் டச் என்றும் பாடம் எடுக்க வேண்டியது காலத்தின்கட்டாயமாகிறது.ஒரு காலத்தில் ஊருக்கு ஓரம் சுடுகாடு அருகில் கள்ளுக்கடையும்,சாரயக்கடையும்இருக்கும் குடிப்பதற்கு போகும் குடிகாரன் தலையில் முக்காடு போட்டான்.தற்போது இவர்கள் செய்யும் கேலிக்கூத்தால் குடிக்காதவனை வித்தியாசமாகப் பார்க்கும் நிலை. நாடு கேட்டுப்போச்சு தம்பி என ஒரு கிழம் பேசியபடி விசாரிக்கிறது கடை எப்பத் திறக்கும் ..இந்த நிலை நீடிக்க அரசும் ஒரு காரணம் நாடு சீரழிவின் விளிம்பில்.ஆண்கள் குடியிலிருந்தும் பெண்கள தொலைக்காட்சி சீரியல்களிலிருந்தும் விடுபட வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்