ஓ.பி ரவீந்திரநாத்குமாரை காத்திருக்க வைத்து.மத்திய அமைச்சராகவுள்ள ஜி.கே.வாசன் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழக கோட்டாவில் வாசன் இடம்பிடித்துவிடுவார் என்பதால் துணை முதல்வர். மகன் ரவீந்தரநாத் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்.ஒரே நபராக அதிமுக சார்பில் நாடாளுமன்றத்துக்கு செனற தனக்கு அமைச்சரோ, இணை அமைச்சரோ கிடைக்கும் என எதிர்பார்த்தார்.
ஆனால் கட்சி சீனியர்கள் தம்பிதுரை, முனுசாமியை அடுத்து ஜி.கே.வாசனும் எம்.பி யானதில் சாதுர்யமும் நிறைந்த முதல்வராக இருக்கிறார் எடப்பாடி கே.பழனிச்சாமி. 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழகத்தில் வெற்றிபெற்ற ஒரே நபர் ரவீந்தரநாத் குமார் மட்டுமே. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் தோல்வியை தழுவினால் அது தனது இமேஜை பாதிக்கும் என்பதால் மிகத் தீவிரமாக பணியாற்றி,எப்படியோ வெற்றிபெற வைத்தார். தமிழக பிரதிநிதித்துவப்படி மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருக்க, இடையூறாக சீனியர் வைத்திலிங்கம் எம்.பி. யானதால் முடியவில்லை. விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் உறுதியாக நடக்கும் என நம்பும் நிலையில் இடம் கிடைக்கும் என நம்பிக் கொண்டிருந்தார். அந்த நம்பிக்கைக்கு வேட்டு வைக்கும் விதமாக அதிமுகவின் சீனியர்கள் இருவருக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து தம்பிதுரையையும், முனுசாமியையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த ராஜதந்திரி முதல்வர் தான் இதனால் இந்த முறையும் ரவீந்தரநாத் மத்திய அமைச்சரவையில் இடம் பிடிக்க முடியாதநிலை தான்.
மத்திய அமைச்சரவையில் தமிழக பிரநிதியாக ஜி.கே.வாசனை ஏற்கனவே மோடியும், அமித்ஷாவும் தேர்வு செய்துவிட்டதாகவும் அவருக்கு அதனால் ராஜ்யசபா சீட் கொடுத்ததாகவும் டெல்லியில் ஒரு செய்தி உலா வர ஜி.கே.வாசன் போன்ற நபர் தான் ஓ.பி.எஸ். மகனுக்கு போட்டியை கொடுக்க முடியும் என்பது முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் நம்பிக்கையாம். இதனால் தான் கேட்டதும் கட்சியினருக்காக பெயருக்கு தயங்கிவிட்டு பிறகு மன மகிழ்ச்சியுடன் வாசனுக்கு ராஜ்யசபா சீட்டை கொடுத்ததாகப் பேச்சும் உலா.விரைவில் அமைச்சர் பதவியில் வாசனைப் பார்க்கலாம் என்பதே டில்லி மக்கள் பேச்சில் அறியலாம்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்