முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரயில் பெட்டிகள் கொரானா சிகிச்சை மருத்துவமனையாகிறது

கொரானா சிகிச்சைக்காக தனி மருத்துவமனை ரயில் பெட்டி அரசு அதிரடி.கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க சீனாவில் பத்து நாட்களில் தனி மருத்துவமனைக கட்டியது போல இந்தியாவிலும்   தற்காலிக மருத்துவமனை நிறுவப்பட் டுள்ளது.தற்போது உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக் கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் வுஹான் மாகாணத்திலேயே கண்டறியப் பட்டது. ஆரம்பத்தில் இந்த வைரஸின் தீவிரத்தைப் பற்றி முழுமையாக உணராத சீனா, பின்னாளில் அதன் கொடிய தன்மையைப் பற்றி அறிந்ததும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, நகரத்தின் ஒதுக்கு புறத்தில் கொரோனா சிகிச்சைக் கென தனி மருத்துவமனையை அது கட்டியது.அந்த மருத்துவ மனையை வெறும் பத்தே நாட்களில் அந்நாட்டு அரசு கட்டி முடித்தது. இந்த மருத்துவ மனையில், ஒரே நேரத்தில் 1600க்கும் அதிகமானோருக்கு சிகிச்சை அளிக்கின்ற வகையில் படுக்கைகள் மற்றும் வென்டி லேட்டர் வசதிகள் ஏற்படுத்தப் பட்டன. தற்போது இதே மாதிரியான ஓர் மருத்துவ மனையை உருவாக்கும் முயற்ச்சியில் இந்திய அரசு இறங்கியிருக்கின்றது.
ஆனால், சீனாவைப் போன்று அல்லாமல் இந்திய அரசு ரயில் பெட்டிகளை தனி வார்டு சிகிச்சை அறையாக பயன்படுத்த திட்டமிட்டிருக்கின்றது. அதன்படி, உருவாக்கப்பட்ட ரயில் பெட்டிகளின் புகைப்படம் தற்போது இணையத்தில்  புகைப்படமாக நோயாளிக்கு என தனி படுக்கை மற்றும் கழிவறை என தனித் தனியாக நிறுவப்பட்டிருக்கின்றன. இதேபோன்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்காகவும் தனி அறைகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.இவையனைத் தும் ரயில் பெட்டிகளில் ஏற்கனவே இருந்த தனியறைகளிலேயே ரயில்வே நிர்வாகம் தயார் செய்திருக்கின்றது. இதற்காக, குளிர்சாதனமில்லாத அறை அல்லாத ரயில் பெட்டிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அறைகளில் ஒரு பக்கத்தின் மேல் மற்றும் கீழ் இருக்கைகள் மட்டுமே அப்படியே விடப்பட்டிருக்கின்றன. மற்ற நான்கு இருக்கைகளும் நீக்கப்பட்டு மருத்துவம் அளிப்பதற்கு ஏதுவான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக மருத்துவ முகாம்களில் செல்போன் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்கின்ற வசதியும் வழங்கப்பட்டிருக் கின்றது. தொடர்ந்து, தனிமைப் படுத்துதலை உறுதிச் செய்கின்ற வகையில் திரை உள்ளிட்டவை நிறுவப்பட்டிருக்கும் .நோயாளிகள் எண்ணிக்கை கூடும்போது பெட்டிகள் எண்ணிக்கை கூடும்.இதுவும் நல்ல முடிவுதான்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும் இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதத்தில்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் இந்தாண்டிற்கான விழா வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்று இரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் எ...