ஏசியாநெட் மற்றும் மீடியாஒன் மீதான தடையை கண்டித்து
பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.நாடு முழுவதும் ஊடகங்கள் குறிவைக்கப்படுவதும் , வாய்ப்பூட்டு உத்தரவுகள் போடும் போக்கும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தலைநகர் டெல்லியில் நடந்த கலவரங்களை தொடர்ந்து செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு செய்தி வெளியிடுவதில் பல கட்டுப்பாட்டு நிபந்தனைகளை விதித்தது. இதைத் தொடர்ந்து ஏசியாநெட் மற்றும் மீடியா ஒன் செய்தி தொலைக்காட்சிகள் நிபந்தனைகளை மீறியதாக 48 மணி நேர ஒளிபரப்புக்கு தடை விதித்தது மத்திய அரசு. இந்த வாய்ப்பூட்டு உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டித்தது. இரு செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களும் மேல்முறையீடு செய்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஊடகங்கள் மீது நிபந்தனைகளை விதிப்பது- ஒளிபரப்பை தடை செய்வது ஆகிய கொடுஞ்செயல்கள் கருத்துரிமை நசுக்கும் மோசமான நடவடிக்கைகள். இதை கண்டிக்க வேண்டியது நம்அனைவரின்கடமை.ஊடகங்கள் மீதான மிரட்டல் போக்கை கண்டித்து இன்று 07-03-2020 சனிக்கிழமை மாலை சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.பாரதிதமிழன்
இணைச் செயலாளர் சென்னை பத்திரிகையாளர் மன்றம்.தகவல் படி
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்