கைகூப்பி வணங்குவதால் கொரானா வைரஸ் பரவாது என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் .
சிவகங்கை மாவட்டம் ,காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆரோக்கிய மையத்தின் சுகாதாரத்துறை சார்பில் கொரானா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன் பேசியபோது, சீனாவிலிருந்து 92 நபர்கள் சிவகங்கை மாவட்டம் வந்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
சுகாதாரத்தைப் பேணிக்காத்தால் தான் நோயிலிருந்து தப்பிக்க முடியும். நாம் ஒருவருக்கொருவர் கை கூப்பி வணக்கம் சொல்வதால் கொரானா வைரஸ் பரவாது என்று கூறினார்.தொடர்ந்து அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட இணைய வழி வேலைவாய்ப்புத் தளம் மற்றும் பயோ-மெட்ரிக் வருகை பதிவு முறையை ஆட்சியர் திரு ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்