தனது பழைய நண்பருக்கு திடீரென தொலைபேசியில் பிரதமர் மோடி.ஒரு சில நிமிடங்கள் உரையாடிய நிகழ்வு.தமிழகத்தில்
வாசுதேவனிடம் நலம் விசாரித்து விட்டு இந்த கொரானா சீற்றத்தைச் சரி செய்த பின்னர் உங்களிடம் நான் மீண்டும் பேசுகிறேன் எனக் கூறி விடைபெற்றார் மோடி.
கொரானா வைரஸ் பிடியில் நாடு சிக்கியுள்ள நிலையில் அதை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது, பாரதப் பிரதமர் இரவு பகலாக அந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் , தற்போதுள்ள கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் கோயமுத்தூர் துடியலூர் பகுதி பாஜகவின் மூத்த உறுப்பினர் களில் ஒருவரான வாசுதேவன் எனும் தன் பழைய நண்பருக்கு தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்துள்ளார் மோடி , இது பாஜக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன்(வயது80) அசோக் லைலண்ட் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றவர். கடந்த 1958 லிருந்து தற்போது வரை பாஜகவின் உறுப்பினராக இருந்து வருகிறார் . இதில் இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் அவரது தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது அதில் பிரதமர் இன்னும் சற்று நேரத்தில் உங்களுடன் பேச இருக்கிறார் நீங்கள் தயாராக இருங்கள் என்று ஒரு குரல் சொன்னது, இதில் வாசுதேவனுக்கு ஒன்றுமே புரியவில்லை , ஆச்சரியத்தில் உறைந்தார், பின் சிறிது நேரம் கழித்து வணக்கம் என்று தமிழில் பிரதமரின் குரல் கேட்டதும் மகிழ்ச்சியில் உறைந்த வாசுதேவன் நமஸ்தே ஜி என்று பதிலளித்தார் வாசுதேவனிடம் நலம் விசாரித்த பிரதமர் ஞாபகம் இருக்கிறதா 1980-ஆம் ஆண்டு நாம் இருவரும் ஒன்றாய் டெல்லி நோக்கிப் பயணம் செய்துள்ளோம் என்று பிரதமர் மோடி கேட்க, ஆமாம் ஆமாம் ஞாபகம் உள்ளது அப்போது டெல்லியில் நடந்த தேசிய மாநாட்டிற்குச் சென்று கொண்டிருந்தோம் அன்று நாம் இருவரும் நிறையப் பேசினோம் என்றார். நீங்கள்தான் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் என்று பிரதமர் இந்தியில் சொல்ல, ஆமாம் ஐயா 1958 லிருந்து உறுப்பினராக உள்ளேன் என்றார் வாசுதேவன் . பின்னர் வாசுதேவனிடம் நலம் விசாரித்து விட்டு இந்தக் கொரானா சீற்றத்தை சரிசெய்த பின்னர் உங்களிடம் நான் மீண்டும் பேசுகிறேன் என்று கூறி விடைபெற்றார் மோடி.
இந்நிலையில் பிரதமர் மோடி நலம் விசாரித்தது குறித்து வாசுதேவனிடம், செய்தியாளர்கள் அணுகியபோது அவர் ''பாஜகவின் குஜராத் மாநில அமைப்பு செயலாளர் என் நண்பர், அவர் மூலமா எனக்கு மோடிஜி 1980 ஆம் ஆண்டு அறிமுகமானார், அதன்பின்னர் பாஜகவின் குஜராத் அமைப்பு செயலாளராக பொறுப்பேற்றார் அந்த ஆண்டில் டெல்லியில் கட்சியின் தேசிய மாநாடு நடைபெறவிருந்தது நான் அப்போது தேசிய குழு உறுப்பினர்களில் ஒருவராக அதில் கலந்துகொள்ள ரயிலில் சென்றேன் ரயில் பெட்டியில் எனக்கு ஒரு ஆச்சரியம் என்னவென்றால் மோடி அவர்களும் என்னுடன் பயணம் செய்தார் , நானும் மோடி அவர்களும் எதிரெதிர் சீட்டில் அமர்ந்தபடி பேசிக்கொண்டே டெல்லிக்கு பயணித்தோம் , என்னிடம் தமிழ்நாட்டைப் பற்றியும் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் பற்றியும் கேட்டறிந்தார்.எனத் தெரிவித்தார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்