முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய கல்விக்கொள்கை துரோணோச்சாரியாருக்கும் ஏகலைவனுக்குமான இடைவெளியா உண்மை என்ன

புதிய கல்வி கொள்கை மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்கவில்லை எனவும் திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு தனது எதிர்ப்பினைப் பிரகடனப்படுத்தவும் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்பது சட்டப்படியான நிலைப்பாடு இதில் மூன்றாவது மொழியைத் திணிப்பது ஏற்கத்தக்கதல்ல என முதற்கட்டத்திலேயே நிராகரிக்கப்படவேண்டிய ஒன்று எனவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுக்கும் நிலையில் அதில் உள்ள பாதகம் குறித்த தகவல் தான் மக்கள் பயம் கொள்ளக் காரணமாக உள்ளன 3,5,8-ம் வகுப்புகளுக்கு உரிய ஆணையம் தேர்வு நடத்தும் என்பதும், 5 ஆம் வகுப்பு வரை தேர்வே கிடையாது என்ற நிலையில் 3 ஆம் வகுப்பில் இருந்தே தனி ஆணையம் தேர்வு நடத்தும் என்பதுமாகும். இனி, கல்லூரிகளில் பி.எஸ்.சி, போன்ற இளங்கலை விஞ்ஞானப் படிப்புக்கு கூட என்.டி.ஏ. என்ற ஓர் அமைப்பை அகில இந்திய அளவில் உருவாக்கி அதன்மூலம் நுழைவுத் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படும் நிலை உள்ளதாகவும் நுழைவுத் தேர்வே கூடாது- நீட் அறவே வேண்டாம் என்ற மக்கள் கருத்துக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் புதிய கல்வி முறையை திணிப்பது ஏழை மாணவர்களின் 12 ஆம் வகுப்பு பள்ளிக் கல்வியுடன் படிப்பை நிறுத்தும் நோக்கம் கொண்டதாகவும் பார்க்கும் நிலையுள்ளது. மாநில அரசுகளின் கருத்து என்ன என்பதுதான் மிக மிக முக்கியமாகும். கல்வி என்பது வெறும் மத்திய அரசை மட்டும் சார்ந்ததா மாநில அரசும், மத்திய அரசும் இணைந்த ஒத்திசைவுப் பட்டியலா என்ற விவாதம் தற்போது துவங்கியுள்ளது. அதற்கு பின்வரும் காரணமும் முன்வைக்கப்படுகிறது.புதிய கல்விக் கொள்கைக்கான வரையறை அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது 43 பக்கக் கொள்கைப் பிரகடனமாகும் அது https://www.docdroid.net/n5FOFPh/2019-pdf கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறதென பலரும் சுட்டிக்காட்டும் சம்ஸ்கிருதத் திணிப்பும் என்பதையும் தாண்டி, பல்வேறு அபாயங்களை மோடி அரசின் கல்விக் கொள்கை கொண்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை உற்றுநோக்கும் பலரும் மெக்காலேவுக்கு முன்னும் பின்னும் உள்ள நிலை ஆராய்வது தான் தற்போது விவாதம் 1813ஆம் ஆண்டில் முதலாவதாக இந்திய மக்களின் கல்விப் பொறுப்பை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி அரசு கல்வி சாசனம் ஆவணத்தை வெளியிட்டது. அதற்காக ரூபாய் ஒரு லட்சம் அன்றய மதிப்பில் ஒதுக்கப்பட்டதும், அதுவும் கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது தான் வரலாறு. ஆங்கிலக் கல்வியே தங்கள் கொள்கைக் கல்வி என ஆவணம் பகிரங்கமாக்கி அறிவித்தது. கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்க்க, இந்திய மக்களுக்குச் இதர தகுதி தேவையில்லைஎன்றானது. பிரிட்டிஷ் கல்வி த் தகுதியின் அடிப்படையில் தான் வேலை வழங்கப்படும் என அதன் இரண்டாம் ஷரத்துல் குறிப்பிடுகிறது. 1834 ஆம் ஆண்டில் மெக்காலே இந்தியாவுக்கு வந்து கவர்னர் ஜெனரல் பெண்டிங் பிரபு உடன் ஆலோசித்து இந்தியக் கல்விக்கு - பொதுக் கற்பித்தல் முறையாகப் பெயரிட்டு, அவரைத் தலைவராக்க எண்ணம், அறிவு, கலாச்சாரம் மூன்றும் ஆங்கிலேயராகவும் இரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும் இருக்கும் ஒருவரை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் என அறிவித்தார் மெக்காலே, 267 பக்கங்கள் கொண்ட கல்விக் கருத்துருவை அரசுக்களித்தார். ஆங்கில மொழிக் கல்வியை முழுதும் வேலைக்கான தகுதி பெறும் கல்வியாக்கினார். பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் அச்சிடுவது கூடத் தடை செய்து “வியாபார, நிர்வாக மொழியாய் ஆங்கிலம்; அதற்காக பிரிட்டிஷ் அரசுக்குத் தேவை லட்சக்கணக்கான - கணக்காளர், எழுத்தர் அந்த வேலைக்கான கல்வி இது மேதாவிகள், தத்துவ அறிஞர்கள் எல்லாம் நமக்குத் தேவையில்லை என்றார் 1835 ஆம் ஆண்டில் வில்லியம் பெண்டிங் பிரபு, மெக்காலே குறிப்புகளை ஏற்று முழுமையாக அதை அமல்படுத்திவிட்டார். ‘வேலை… கும்பேனி அரசு வேலை, தனியார் ஆலை வேலை எனும் ஈர்ப்பே கல்வியின் அடிநாதமாக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி தரும் சான்றிதழ், வேலை பெறும் ஒரு அடையாளச் சீட்டானது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி விமர்சித்ததும் உண்டு 1853 ஆம் ஆண்டில் இங்கிலாந்து கல்விக் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் தலைவராக சார்லஸ் வுட் தலைமையில் கல்விக் குழு இந்தியா வந்து. 1854 ஆம் ஆண்டில் கர்சன் பிரபு முன் வைக்கப்பட்ட அறிக்கை தான் நம் கல்வி முறையிலிருக்கும் காலாண்டு, அரையாண்டு,முழு ஆண்டுத் தேர்வு முறை என்பதெல்லாம். பள்ளிக்கான சீருடை, ஒரு பாடமாகப் பிராந்திய மொழி போன்றவற்றை 1882 ஆம் ஆண்டில் வில்லியம் ஹண்டர் தலைமையில் உருவான இந்தியக் கல்வி கமிஷன் கொண்டு வந்ததாகும். மெக்காலேவுக்குத் தேவைப்பட்டது பிரிட்டிஷ் காலக் கணக்காளர்கள்தான் , சுதந்திரமடைந்த பின் இராஜீவ் காந்திக்குத் தேவைப்பட்டது பில்கேட்ஸின் வேலையாட்கள்தான், தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் தேவை அதில் மாறுபட்டது. அவ்வளவு தான் கடந்த 73 ஆண்டுகளில் கடும் போராட்டங்கள், சோதனைகளுக்குப் பின் உருவான துரோணாச்சாரியார் ஏகலைவர்களின் கட்டை விரல்களைத் துண்டாடிய நிகழ்வாக இருந்துவிட்டால் என்ன செய்வது என்பதே இப்போது மொழிவாரி மாநில மக்கள் கவலை இக்கல்விக் கொள்கை இப்போது வரையப்பட்டுள்ளது. இனி சட்டமாகி வரும் போது தான் அது செயலாக்கம் புரியும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...