இயேசு அழைக்கிறார் பால் தினகரனை வருமான வரித்துறை அழைக்கிறார்கள் மோசடி குற்றத்தில்

இயேசு அழைக்கிறார் பால் தினகரனை வருமான வரித்துறை அழைக்கிறார்கள் மோசடி குற்றத்தில்
.இயேசு அழைக்கிறார் பால்தினகரன் அதில் பிழைக்கிறார். வெளிநாட்டு  முதலீடு ரூ.120 கோடி வசமாக சிக்கினார்.     இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் பால் தினகரன் கிறிஸ்துவ மதப் பிரசாரக் கூட்டங்களை நடத்துபவர் இவர் வெளிநாடுகளிலும் கிளைகள் வைத்து உள்ளார். பல கல்வி நிறுவனங்களையும் நடத்துகிறார்.  இயேசு அழைக்கிறார் என்ற குழுமத்திற்கு வந்த நிதிக்கு, முறையாக வரி செலுத்தவில்லை என, வருமான வரித் துறைக்கு புகார் வரவே. மேலும், கல்வி நிறுவனங்களுக்கு கிடைக்கும் வருவாய் மற்றும் ஜெபக் கூட்டங்களுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வரக் கூடிய நன்கொடைகளையும் குறைத்துக் காட்டி, வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார்கள் வந்ததையடுத்து, சென்னை, கோயமுத்தூர் உள்ளிட்ட, பால் தினகரனுக்குச் சொந்தமான, 25 இடங்களில், கடந்த மூன்று  தினங்களாக வருமான வரித் துறையினர்  சோதனையில் ஈடுபட்டனர். இது நேற்று இரவு முடிவடைந்தது. பிற இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை காருண்யா பல்கலைக்கழகத்திற்கு மொத்தமாக கொண்டு வரப்பட்டு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. காருண்யா பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் ஐந்து கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மூன்று நாள் சோதனையில் ரூபாய்.120 கோடி அளவிற்கு கணக்கில் காட்டப்படாத முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து மத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் நிலையில், பால் தினகரன் அடுத்த வாரம் சென்னையில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்