தேர்தல் பிரச்சாரம் மூலம் தீவிரமாக செயல்பட்ட1990 களில் நடிகை விந்தியா மரணமென கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி. 1990 களில் சினிமாவுக்கு வந்தவர், கோயமுத்தூரில் பிறந்து வளர்ந்தவர் நடிகை விந்தியா. தமிழில் முதல் திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘சங்கமம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே வெற்றிப்படமாக அமைய அடுத்தடுத்து அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன .வழக்கம் போலவே பெரிய படவாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தவுடன், கிடைக்கும் படங்கள் எல்லாம் நடிக்கத் தொடங்கி ஒரு கட்டத்தில் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
சங்கமம் படத்திற்கு பின்னர், திருநெல்வேலி, மகளிர்காக கண்ணுக்கு கண்ணாக போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவே இவரை மறந்து விட, 2008 ஆம் ஆண்டு நடிகை பானு ப்ரியாவின் சகோதரர் கோபால கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்ட விந்தியா திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். வாழ்க்கை சரியாக அமையாத காரணத்தால், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2012 ஆம் ஆண்டு விந்தியா விவாகரத்துக்கோரி நீதி மன்றம் சென்றார் .
பின்னர் சில படங்களில் நடிக்க முன்வந் த விந்தியா நடிப்பு செட் ஆகாத காரணத்தால் நடிப்பை நிறுத்திக் கொண்டு அரசியலில் கவனம் செ லுத்தத் தொடங்கினார். 2011 ஆம் ஆண்டு தொடங்கி அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் விந்தியாவுக்கு கடந்த ஆண்டு அஇஅதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படடது. அதைத்தொடர்ந்து நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளுக்குச் சென்று திமுகவிற்கு எதிராக தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டார்
இந் நிலையில் அவர் வெளியிட்ட பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகிறது. பதிவில் தான் உயிருடன் இருக்கும் போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியிருப்பதாகவும் இது போன்ற போஸ்டர்களைப் பார்த்தால் ஆயுள் கூடும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
உலகத்திலேயே தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரைப் பார்த்து தானே சிரிக்கும் பாக்கியம் கிடைத்தவர்களில் நானும் ஒருத்தி என்று கூறியிருக்கும் அவர் திமுகவினர் மு.க .ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரே என போஸ்டர் போட்டு அலுத்துப் போய்விட்டார்கள் போல என்றும் ஆண்டவனைத் தவிர தனக்கு யாராலும் என்ட் கார்டு போட முடியாது என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.



கருத்துகள்