முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹோட்டல் மேலாண்மை முதல் தரநிலை கிளப் தென் பிராந்திய துணை தலைமை இயக்குனர் யு.எஸ்.பி யாதவ் தொடங்கி வைத்தார்.

 இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (தென்  பிராந்தியம் - சென்னை) புதிய துணை இயக்குனர் ஜெனரலாக, ஸ்ரீ யு எஸ் பி யாதவ்   விஞ்ஞானி எஃப், இன்று (2 செப்டம்பர் 2021) பதவி ஏற்றுக் கொண்டார்.

தெற்கு பிராந்திய அலுவலகத்தின் அதிகார வரம்பு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகியவற்றின் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது.
இந்திய தர நிர்ணய அமைவனத்தில், ஸ்ரீ யு எஸ் பி யாதவ்பெங்களூரு, டெல்லி, கவுகாத்தி மற்றும் கொல்கத்தாவில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். மேலும் துணை இயக்குநர் ஜெனரலாக (தெற்கு மண்டலம்) பொறுப்பேற்பதற்கு முன்பு அவர் புதுடில்லியில் தலைவர் ( மேனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ் உரிமம் ), மற்றும் கிழக்கு பிராந்திய ஆய்வகம்  தலைவராக தனது கடமையை நிறைவேற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவல், திரு. எச். அஜய் கன்னா, துணை இயக்குனர் (சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                           முதல் தரநிலை கிளப்: ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப மற்றும் ஊட்டச்சத்து செயல்முறை கழகத்தில் இந்திய தரநிலை அலுவலகம்(பிஸ்) தொடங்கியது

ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப மற்றும் ஊட்டச்சத்து செயல்முறை கழகத்தில், முதல் தரநிலை கிளப்-ஐ, சென்னையில் உள்ள  இந்திய தரநிலை அலுவலகம்-1 (பிஸ்) இன்று தொடங்கியது   


இந்த தரநிலை கிளப்-ஐ இந்திய தரநிலை அலுவலகத்தின் தெற்கு பிராந்திய துணை தலைமை இயக்குனர் திரு யு.எஸ்.பி யாதவ் தொடங்கி வைத்தார்.

ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப மற்றும் ஊட்டச்சத்து செயல்முறை கழகத்தின் முதல்வர் திருமதி ஆர்.பரிமளா வரவேற்புரை நிகழ்த்தினார் மற்றும் இந்த மையத்தில் தரநிலை கிளப் அமைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

தரநிலை மற்றும் தரம் குறித்த மாணவர்களின் உணர்வை தூண்டுவதுதான் இந்த கிளப்பின் நோக்கம் எனவும், இதை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கினார்.


இந்திய தரநிலை சென்னை கிளை அலுவலகத்தின்-1 தலைவியும், ‘இ’ பிரிவு விஞ்ஞானியுமான திருமதி ஜி.பவானி, இத்திட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்து கூறினார் மற்றும் தரநிலை கிளப்பின் பயன்பாடு மற்றும் தரநிலை நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தினார். இது, எதிர்கால தூண்களான மாணவர்களின் தரநிலை உணர்வு குறித்த அம்சங்களின் பார்வையை கவரும்.  இந்த தரநிலை கிளப்பில், உறுப்பினர்கள் தீவிரமாக பங்காற்ற வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.


இந்திய தரநிலை அலுவலகத்தின் தெற்கு பிராந்திய துணை தலைமை இயக்குனர் திரு யு.எஸ்.பி யாதவ் பேசுகையில், அன்றாட வாழ்க்கையில் தரநிலை மற்றும் தரம் குறித்த தேவைகளை விளக்கினார்.  இந்த மையத்தின் மாணவர்கள்தான் எதிர்காலத்தில் உணவு தொழில்துறை மேலாளர்களாகவும், தொழில் முனைவோர்களாக இருப்பார்கள் என குறிப்பிட்ட அவர்,  தரநிலை கிளப்புகள் மூலம் தரப்படுத்தல் என்ற கருத்துடன் தங்களை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்திய தரநிலை சென்னை கிளை அலுவலகம்-1-ன் டி பிரிவு விஞ்ஞானி திரு ஜோஸ் சார்லஸ் பேசுகையில், இந்திய தரநிலை அலுவலகத்தின் பல நடவடிக்கைகளையும், உணவு மற்றும் விருந்தோம்பல் துறையில் இந்திய தரநிலை அலவலகம் உருவாக்கிய தரநிலைகளையும்  மாணவர்களுக்கு விளக்கினார். சென்னை கிளை அலுவலகத்தின் பி பிரிவு விஞ்ஞானி ஜி.துர்கா பிரசாத் பேசுகையில், தரநிலை கிளப்பின் முக்கிய அம்சங்கள் மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் குறித்து தெளிவாக விளக்கினார்.  இந்த தரநிலை கிளப்பில் மாணவர்கள் அதிகளவில் ஆர்வத்துடன் பதிவு செய்து கொண்டனர். மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இந்திய தரநிலை அலுவலக அதிகாரிகள் திருப்திகரமாக பதில் அளித்தனர்.

இவ்வாறு, துணை இயக்குனர் திரு எச்.அஜய் கண்ணா (மார்கெட்டிங் மற்றும் நுகர்வோர் விவகாரம்) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...