முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நகைக் கடன் மோசடி தனியார் நகை அடகுக்கடைக்காரர்கள் வங்கி ஊழியர்கள் மீது கிரிமினல் வழக்கு

நகைக் கடன் மோசடி


தனியார் நகை அடகுக்கடைக்காரர்கள் வங்கி ஊழியர்கள் மீது கிரிமினல் வழக்கு



தமிழகம் முழுவதும் உள்ள அந்தியோஜனா திட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கியில் கிலோ கணக்கில் நகைகள் அடமானம் வைத்து  பல ஆண்டுகளாக முறைகேடு நடைபெற்றுள்ளது. நகைக்கடன் தள்ளுபடியில் மோசடி செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு திண்டுக்கல்லில் பேட்டி அளித்தபோது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறியது போல் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு குறைவாக நகை அடமானம் வைத்திருப்பவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். அதன்படி ரூபாய்.6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது. குரும்பூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூபாய் .2 கோடி மதிப்புள்ள 247 நகை பொட்டலங்கள் இல்லை. வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வழங்கக்கூடிய அந்தியோஜனா திட்டத்தின் கீழ் அவர்களது பெயரில் கிலோ கணக்கில் நகைகள் அடமானம் வைத்ததாகக் கூறி, பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களிடம் எப்படி கிலோ கணக்கில் தங்கம் இருந்திருக்கும்.

கூட்டுறவு வங்கிகளில் நூதன முறைகளில் நகை கடன் மோசடி- நடந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி  அதிர்ச்சி அடைந்த நிலையில்

600 நகைக்கடன் வழங்கியதில் வங்கியில் பெரிய தவறு நடைபெற்றுள்ளது. தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மாவட்டத்திலுள்ள பாப்பையாபுரம் என்ற சொசைட்டியில் மூக்கையா என்பவர் மட்டும் 300 நகைக்கடன் பெற்றுள்ளார. இதுபோல் ஒரு சில நபர்கள் 100, 200, 300, 600 என மொத்தமாக நகைக்கடன் பெற்றுள்ளார்கள். கவரிங் நகைக்கு கடன் வழங்கியுள்ளார்கள். இப்படி விதவிதமாக மோசடி நடந்து உள்ளது

கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் கடன் பெற்றவர்களுக்கும் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள அலுவலர்களுக்கும் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி பெற வருபவர்களின் தகுதியை உறுதி செய்த பின்புதான் தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்.

தாசில்தார் அலுவலகத்தில் வட்டிக்கடை நடத்த உரிமம் பெற்ற பலர் குறைந்த முதலீடு செய்து மூன்று வட்டி அடமானம் வைப்பவர் மூலம் வாங்கி அவர்கள் நகையை தங்கள் பெயரில் வங்கியில் வைத்து பல கோடி பலவருடங்களாக சம்பாதித்த பலரை நாம் அறிவோம் அவர்கள் மீது வருமான வரித்துறை மற்றும் அதற்கு உதவியாக இருக்கும் வங்கி ஊழியர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதே அணைத்து மக்கள் எதிர்பார்க்கின்றனர் காரணம் இப்படி நாம் அறிந்த வரையில் முப்பது வட்டிக் கடைகள் உள்ளன.

தனியார் நகை அடகுக்கடை நடத்தக் கூடியவர்கள் தங்களிடம் அடமானத்திற்கு வரக்கூடிய நகைகளை, கூட்டுறவு கடன் சங்கத்திலோ அல்லது கிராம வங்கிகளிளோ அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .அது பல மாவட்டங்களில் வங்கி அலுவலர்கள் உதவியில் நடந்துள்ளது. அவர்கள் கூடுதலாக லாபம் அடைந்துள்ளனர் என்ற  சந்தேகம் அல்ல அதில் உண்மை உள்ளது. இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.மேலும் இதில் சம்பந்தப்பட்ட வங்கிகளின் ஆடிட்டர் உள்ளிட்ட நபர்கள் உடந்தை இது கடந்த 20 வருடமாக நடக்கும் குற்றச் செயல்களாகும்.

தமிழகத்தில் மொத்தம் ரூபாய்.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக மேற்கு மண்டலத்தில் உள்ள சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் ஏறத்தாழ ரூபாய்.2,500 கோடி அளவிற்கு பயிர்க்கடன் தள்ளுபடி அளித்திருக்கிறார்கள். தமிழகத்தின் பயிர்க்கடன் தள்ளுபடியில் 25 சதவீதம் அளவிற்கு இங்கே தள்ளுபடி அளிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்தபோது குறைந்த நிலம் உள்ள விவசாயிகளுக்கு அதிகளவில் பயிர்க்கடன் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயம் செய்யாத தரிசு நிலங்களுக்கு ரூபாய்.110 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது" இவ்வாறு அமைச்சர் ஐ பெரியசாமி கூறினார்,.

இதனிடையே ஒரே ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஒரே நபர் பல சங்கங்களில் லட்சக்கணக்கில் நகை கடன்களை பெற்றிருப்பது, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு சங்கங்களில் பல நகை கடன்களின் மூலம் லட்சக்கணக்கிலான ரூபாய் கடன் பெற்றிருந்தது என பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன் வழங்கியதற்காக பெறப்பட்ட 500 பொட்டலங்களில் 261 பொட்டலங்களில் ஆய்வின்போது நகை இல்லை. நகை இல்லாத இந்த பொட்டலங்களின் நகை கடன் மதிப்பு ரூபாய்.1.98 கோடி ஆகும்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தில், குமாரக்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒரே ஆதார் எண்ணின் அடிப்படையில் பலர், பல செல்போன் எண்களை பயன்படுத்தி லட்சக்கணக்கில் நகை கடன் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. குமரி மாவட்டம் கீழ்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், ஒரே நபர் 647 நகை கடன்கள் மூலம் ரூ.1.47 கோடி கடன் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றொரு நபர் 5 பவுனுக்கு உட்பட்டு 625 நகை கடன்கள் மூலம் ரூ.1.25 கோடி கடன் பெற்றுள்ளதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் ஒரு சிலர் அவர்களுக்குரிய ஆதார் எண்ணை பயன்படுத்தி 538 நகை கடன்கள் மூலம் 5 பவுனுக்கு உட்பட்டு 3 ஆயிரத்து 508 கிராமுக்கு ரூ.74 லட்சம் கடன் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஒரே நபர் 300-க்கும் மேற்பட்ட நகை கடன்கள் (அனைத்தும் 40 கிராமுக்கு உட்பட்டது) 2 ஆயிரத்து 808 கிராமுக்கு நகைகளை அடகு வைத்து ரூ.65 லட்சம் நகை கடன் பெற்று உள்ளார்கள். மதுரை மாவட்டத்தில் பாப்பையாபுரம் மற்றும் சுந்தரலிங்கபுரம் ஆகிய 2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி ஒரே நபர் 300-க்கும் மேற்பட்ட நகை கடன்கள் மூலம் ரூ.70 லட்சம் கடன் பெற்று உள்ளார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் நகை அடமானம் வியாபாரம் செய்யும் ஒருவர் செங்கல்பட்டு நகர கூட்டுறவு வங்கியில் 25-க்கு மேற்பட்ட நகை கடன்கள் மூலம் ரூ.8 லட்சம் கடன் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதுபோன்ற பல்வேறு முறைகேடுகளை தொடர்ந்து, தகுதியின் அடிப்படையிலான உரிய பயனாளிகளைத் தவிர மற்றவர்கள் பெற்ற நகை கடன்களை வசூலிக்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அவர் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மேலாண்மை இயக்குனர், அனைத்து மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மேலாண்மை இயக்குனர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் (40 கிராம்) அளவுக்கு மேற்பட்டு நகை ஈடாக பெற்று கடன் வழங்கப்பட்டு 31-3-2021 மற்றும் 31-7-21 அன்றைய தேதியில் இருந்த நிலுவை விவரங்கள் தொடர்பான தரவுகளை ஆய்வு செய்தபோது சில விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன

அதன் விவரம் வருமாறு:- தமிழக அரசால் வழங்கப்பட்ட ரேஷன் கார்டில் இடம் பெற்றுள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் (வங்கிகளில்) 5 பவுனுக்கு மேற்பட்டு நகை கடன் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. ‘ஸ்மார்ட் கார்டு' அடிப்படையில் மாவட்ட வாரியிலான கடன்தாரர்கள் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்கு மேற்பட்டு நகை கடன் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. ஆதார் எண் அடிப்படையில் மாவட்ட வாரியான கடன்தாரர்கள் விவரங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

ஆதார் எண் மற்றும் ரேஷன் கார்டு எண் அடிப்படையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் 40 கிராமுக்கு மேற்பட்டு நகை கடன் பெற்ற கடன்தாரர்களின் பட்டியலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 40 கிராமுக்கு மேற்பட்டு நகை கடன்கள் பெற்ற கடன்தாரர்களின் நகை கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் நகை கடன்கள் தவணை கட்ட தவறியிருந்தால் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை பின்பற்றி கடன் தொகைகளை வசூலிக்க வேண்டும்" இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வரவேற்பு பெறும் நிலையில் இனி இதில் வருமானவரித்துறை உரிய நடவடிக்கை இந்த அடமான பணம் பெற்று கடைநடத்திய நபர்கள் மீது தொடங்கும் போது தான் இவர்கள் கதறல் பெரிதாக கேட்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...