இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம்: டிசம்பர் 2021
2021 டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் உட்பட) 57.87 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 23.35 சதவீத வளர்ச்சி.
2021 டிசம்பர் மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி 72.35 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டின் இதே கால அளவை விட 33.86 சதவீதம் நேர்மறையான வளர்ச்சி.
2021 ஏப்ரல்-டிசம்பர் வரை இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் உட்பட) 479.07 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 36.31 சதவீத வளர்ச்சி.
2021 ஏப்ரல்-டிசம்பர் வரை நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி 547.12 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டின் இதே கால அளவை விட 57.33 சதவீதம் நேர்மறையான வளர்ச்சி.
கருத்துகள்