முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமர் புதுதில்லியில் இன்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருடன் பேச்சு வார்த்தை

உர்சுலா வொன் டெ லெயென் உடன் இன்று நடத்திய பேச்சு வார்த்தை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது: பிரதமர்

பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமதி உர்சுலா வொன் டெ லெயென் உடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.  

இந்த பேச்சு வார்த்தை குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;

“ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் வொன் டெ லெயென் உடன் இன்று நடத்திய பேச்சு வார்த்தை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பொருளாதார மற்றும் கலாச்சார பிணைப்புகள் உள்பட இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையிலான முழுமையான உறவு குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள்