நூல் விலையை குறைக்கவும், மூலப்பொருள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவும், வலியுறுத்தி பின்னலாடை நிறுவனங்கள் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டம்
பஞ்சு மற்றும் நூல் விலையை குறைக்கவும், மூலப்பொருள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவும், ஜவுளியை யூக வணிகத்தில்ருந்து நீக்கி அத்தியாவசியப் பட்டியலில் சேர்க்கவும்
பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் விசைத்தறி , ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கினர்.
இதனால் திருப்பூர், பல்லடம் , ஈரோடு கரூர், சேலம், கோவை , ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய தமிழகத்தின் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.500 கோடிக்கும் மேல் ஆடை உற்பத்தி முடக்கமேற்படுமென அஞ்சப்படுகிறது. பஞ்சு நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி யாளர்கள் இரண்டு நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை இன்று துவக்கி உள்ளனர். பின்னலாடை துறை சார்ந்த 30 க்கும் மேற்பட்ட சங்கங்கள் சேர்த்து போராட்டத்தை நடத்துகின்றன.
உள்நாட்டு ஏற்றுமதி ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் , நிட்டிங் டையிங், பிளீச்சிங், ரைசிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, ரோட்டரி பிரின்டிங், பவர்டேபிள், செக்கிங், அயர்னிங், பேக்கிங் உள்பட அனைத்து வகை ஜாப் ஒர்க் நிறுவனங்கள். நூல், துணி, சாயம் வர்த்தகம்; எலாஸ்டிக், அட்பெட்டி, பாலிபேக் என துணை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இன்று முதல் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.திருப்பூரிலிருந்து வெளிமாநிலங்களுக்கு சரக்கு கொண்டு செல்லும் வாகனங்களின் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் ஒன்பதாயிரம் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
தினசரி காலை 8:30 மணிக்கே உற்பத்தியை துவக்கும் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், வேலைநிறுத்தம் காரணமாக, தொழிலாளர்கள் வருகையின்றி, இயந்திர சப்தமில்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இன்றும், நாளையும் இரண்டுநாள் போராட்டத்தால், திருப்பூரில் மட்டும் ரூ. 200 கோடி ஏற்றுமதி; 160 கோடிக்கு உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தியென, ரூ.360 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை உற்பத்திகள் முடங்குகிறது.
விசைத்தறி உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் பஞ்சு பதுக்கல் தடுக்கப்பட்டு, நூல் மற்றும் உற்பத்திப் பொருட்கள் சீரான விலைக்கு கிடைக்குமென உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள்