முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உணவு விநியோக ஸ்விகி ஊழியரை போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் காவலர் கைதாகி ஜாமீனில் வந்த நிலையில் பணியிடை நீக்கம்

உணவு விநியோக  ஸ்விகி ஊழியரை போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் காவலர் தாக்கும் நேரடி பதிவு


காணொளிக் காட்சிகள் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்


அவரைத் தாக்கிய போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் காவலர் சதீஷ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த நபர்  கூறியதாவது: "    இந்த  தாக்குதலுக்கு உள்ளான ஸ்விகி ஊழியர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த தகவலின் படி,

''எனது பெயர் மோகனசுந்தரம் சார்.. நான் ஸ்விகியில் வேலை செய்றேன் சார். நேற்று மாலை 5 லிருந்து 6 மணிக்குள் உணவு டெலிவெரி செய்வதற்காக ஃபன் மால் அருகே வந்து கொண்டிருந்த நேரத்தில், நேஷனல் மாடல் ஸ்கூல் பஸ் வந்தது. ஒரு பொண்ணும் பையனும் சென்றுகொண்டிருந்தனர். அப்பொழுது பஸ் அந்த பொண்ண இடிச்சுட்டு போனது. நான் சென்று பஸ்ஸ நிப்பாட்டுங்க அண்ணா, அந்த பொண்ண இடிச்சுட்டு நிக்காம போறீங்க என சத்தம் போட்டேன். அதற்கப்புறம் நிப்பாட்டுனாங்க. அதற்கப்புறம் அங்கிருந்த போலீசார் ஒருவர் என்னை எதுவும் கேட்காமல் கன்னம் கன்னமாக அறைந்துவிட்டு 'நேஷனல் மாடல் ஸ்கூல் பஸ்ஸை நிறுத்தற அளவுக்கு நீ பெரிய ஆளா... நீ என்ன போலீசா' என தாக்கி எனது ஹெட்போனை பிடுங்கி எறிந்தார். எனது மொபைல், வண்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விட்டார். என்கிட்ட ஹாஸ்பிடல் போக கூட காசில்ல சார். நேத்து 500 ரூபாய் வைத்திருந்தேன். அதிலும் 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு 300 ரூபாய் வைத்திருந்தேன்.   


ஸ்விகி என் பார்ட் டைம் தான் சார். நான் பிசினெஸ் செய்றேன். ஸ்டேசனரி ஷாப் ஒன்று வைத்து நடத்துறேன் சார். கரோனா காலத்துல எங்களுக்கு கடை வாடகை கட்ட முடியல சார். சாப்பாட்டுக்கு கூட காசில்லாததால ஸ்விக்கு வேலைக்கு வர வேண்டிய நெலம வந்திருச்சு. ஸ்விகில வேலை பாக்குற பசங்க எல்லாம் பி.இ, பி.காம்'னு நெறய படிச்சுருக்காங்க சார். நான் ஆறு லாங்குவேஜ் பேசுவேன் சார். கோகுலம் பார்க்ல ஐடி டிபார்ட்மென்ட்ல ஒர்க் பண்ணிருக்கேன். என்னோட குடும்பச் சூழ்நிலையால் இந்த வேலைக்கு வந்திருக்கேன். வேற வேலைக்குப் போனால் குழந்தையைப் பார்த்துக்க முடியாது. சில டைம் கடைல ப்ராஜெக்ட் வரும் அந்த சமயத்துல கம்பெனில வேலை செய்தா என்னால லீவு போடமுடியாது. ஒருநாள் லீவு தருவாங்க ரெண்டு நாள் லீவு தருவாங்க, மூணாவது நாள் தரமாட்டாங்க சார். அதுனால ஸ்விகில வேலை செய்யுறேன். காலேஜ், ஸ்கூல் ப்ராஜெக்ட் வந்தா ஸ்விகிய லாக் அவுட் பண்ணிட்டு போயிடுவேன். எனக்கு கன்வீனியென்ட்டா இருக்கறதால தான் ஸ்விகில ஒர்க் பண்றேன். இல்லனா நானும் கம்பெனிக்கு வேலைக்கு போயிருப்பேன் சார்'' என கவலையுடன் தெரிவித்தார்.


இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட காவலர் சதீஷ் நேற்று காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியான  நிலையில் தற்போது அவர் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்விகி ஊழியர் கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு காவல்நிலையத்தின் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் காவலர் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைதும் செய்தனர். பொது இடத்தில் அவதூறாகப் பேசுவது, தவறு எனத் தெரிந்தே காயப்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் கைதான சில மணிநேரத்திலேயே காவலர் சதீஷ் சொந்த ஜாமீனில் வெளியே வந்த நிலையில் அவர் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான ஸ்விகி ஊழியர் மோகன சுந்தரத்திடம் தமிழ் நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு நலம் விசாரித்தாரென தமிழ்நாடு காவல் துறையின் முகநூல் பக்கம் தெரிவிக்ககறது.   தன்னுடைய கடமையை பொது ஊழியரான காவலர் சரியாக நிறைவேற்றாததால். ஸ்வீக்கி ஊழியர் பொதுநல நோக்கில் உதவ அது அந்த நியாயம் தெரியாத காவலர் செய்த தவறு.  அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில்.    பொது வெளியில் தவறுகள் நடக்கும் போது யாரும் தடுக்காமல் தான் வேலை மட்டுமே என் வாழும் மக்கள் மத்தியில் ஸ்வீக்கி ஊழியர் ஒரு முன் உதாரணம். இது மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணை செய்தால் சமூக சீர்கேடுகள் குறைந்து, பாதிக்கப்பட்ட நபர் இழப்பீடு பெறுவார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...